நூற்றுக்கணக்கான மக்களின் பசியை தீர்த்த ஷகிலா.! அவர் ரசிகர்களுக்கு சொல்லும் அட்வைஸ் என்ன தெரியுமா.?

shakila 2

80-90 காலகட்டத்தில் கிளாமர் குயினாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. இவரின் சிறந்த நடிப்பு திறமையினாலும், கவர்ச்சியினாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இதன் மூலம் இவருக்கு தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்புகளை மிகவும் சரியாக பயன்படுத்திக் கொண்டு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

பொதுவாக நடிகைகள் என்றால் ஒரு சிலர் மட்டுமே வயதானாலும் கூட தொடர்ந்து குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து வருவார்கள் ஆனால் இன்னும் சில நடிகைகள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சினிமாவில் நடிப்பதை விட்டு விடுவார்கள் அந்த வகையில் ஷகிலாவும் ஒரு கட்டத்திற்குப் பிறகு சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் பல வருடங்கள் கழித்து சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த குக் வித் கோமாளி சீசன் 2வில் கலந்து கொண்டு மீண்டும் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்தார் இதன் மூலம் தற்போது உள்ள இளைஞர்கள் மனதையும் வெகுவாக கவர்ந்தார்.

இவர் திரைப்படங்களில் நடிக்கும் பொழுது மட்டும் தான் அப்படி நடிப்பார் ஆனால் நார்மலாக இவர் மிகவும் அன்பு உடையவராக இருக்கிறார் தற்பொழுது அனைவரும் இவரை மம்மி என்று அழைத்து வருகிறார்கள்.  இவ்வாறு பிரபலமடைந்துள்ள இவர் தற்பொழுது கொரோனாவின் இரண்டாவது அலை தமிழகத்தில் உச்சத்தை தொட்டுள்ளதால் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

எனவே அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன நிலையில்  தெருவோரம் தங்கியிருக்கும் மக்களுக்கு உண்ண உணவு இல்லாமல் தவித்து வருகிறார்கள்.  எனவே ஷகிலா தொடர்ந்து உணவு இல்லாமல் தவித்து வரும் பலருக்கும் உதவி செய்து வருகிறார்.

shakila 1
shakila 1

அதோடு இவர் உணவு அளிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதில் உங்களுக்கு இருக்கும் இரண்டு கைகளில் ஒன்றை உங்களுக்கு உதவி செய்ய வைத்துக் கொள்ளுங்கள் மற்றொன்றை மற்றவர்களுக்கு உதவி செய்ய வைத்துக் கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.  தற்பொழுது ரசிகர்களும் இவரின் செயலைப் பார்த்து பாராட்டி வருகிறார்கள்.

shakila