1983 ஆம் ஆண்டு ‘வெள்ளை மனசு’ என்ற திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுகம் ஆனவர் ரம்யா கிருஷ்ணன் அதனைத் தொடர்ந்து 1985 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் அம்பிகா நடிப்பில் வெளியாகிய படிக்காதவன் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் கார்த்திக், விஜயகாந்த், கமலஹாசன், ரஜினிகாந்த், சரத்குமார், பிரபு, சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
80 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த ரம்யா கிருஷ்ணன் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் ஹிந்தி கன்னடம் என எந்த வாய்ப்பு கிடைத்தாலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்தார். அதுமட்டுமில்லாமல் இளம் நடிகர்களான சிம்பு, ராம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு கிளுகிளுப்பை உண்டாக்கினார்.
கவர்ச்சி கதாநாயகியாகவும் தனது நடிப்பை வெளிப்படுத்தி கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் நடித்து வந்தார். அதுமட்டுமல்லாமல் பாகுபலி திரைப்படத்தில் ராஜ மாதாவாக நடித்து மேலும் மேலும் புகழை பெற்றார். மேலும் குயின் என்ற வெப் சீரியஸ் ஹிட் அடித்ததால் ரம்யா கிருஷ்ணனை கையில் பிடிக்க முடியாத அளவிற்கு புகழின் உச்சிக்கு சென்றார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ரம்யாகிருஷ்ணன் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் கடலில் கப்பலில் ஸ்லீவ்லெஸ் உடை யில் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
