பொதுவாக சமீப காலங்களாக மற்ற மொழி திரைப்படங்களில் நடித்த பிரபலமடைந்து அதன் பிறகு தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகும் நடிகைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது மேலும் சாய் பல்லவி முதல் தற்பொழுது உள்ள பிரியங்கா மோகன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட அனைத்து நடிகைகளும் டாப்பிலிருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தவர் தான் நடிகை பிரியங்கா மோகன். இந்த திரைப்படத்திற்கு பிறகு எதற்கும் துணிந்தவன், டான் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே தெலுங்கிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட நிலையில் பிரியங்கா மோகன் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறுவதையும் செய்து வருகிறார். மேலும் துபாய் லண்டன் என பல்வேறு நாடுகளில் சுற்றுலா சென்றுள்ளார்.
அந்த வகையில் கடைசியாக லண்டனில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் லண்டனிலேயே செட்டில் ஆகிவிடலாம் என முடிவு செய்து விட்டீர்களா என கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்நிலையில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியவுடன் இந்தியாவுக்கு வருவார் என கூறப்படுகிறது.
பிறகு இவர் அடுத்ததாக விஜயுடன் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது. அதாவது விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். அந்த வகையில் விஜயின் 67வது திரைப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இது உறுதியாகிவிட்டால் முன்னணி நடிகைகளின் லிஸ்டில் பிரியங்கா மோகன் இடம்பெறுவார் என கூறப்படுகிறது.