பொதுவாக நடிகைகள் என்றாலே அவர் தொடர்ந்து முன்னணி நடிகையாக வளர்ந்து அவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற்று வந்தால் அவரை பற்றி சினிமாவில் கிசுகிசுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் பல சர்ச்சைகளில் மாட்டிக்கொண்டு தற்பொழுது இறுதியாக விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து உள்ளவர்தான் நடிகை நயன்தாரா.
லேடி சூப்பர் ஸ்டாராக வளர்ந்து வரும் இவர் தமிழ் திரைவுலகில் முன்னணி கதாநாயகியாக கொடிகட்டி பறந்து வருகிறார். இவர் தொடர்ந்து திரைப்படங்களில் மிகவும் பிசியாக நடித்து வரும் நிலையில் கடைசியாக இவர் நடிப்பில் காத்து வாக்குல இரண்டு காதல் திரைப்படம் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளது.
கலவை விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தினை தொடர்ந்து நடிகை நயன்தாரா கனெக்ட்,காட் பாதர் மற்றும் இன்னும் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தெலுங்கில் ஜெயம் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் காட்பாதர் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக இல்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இத்திரைப்படம் மலையாளத்தில் வெளியான லூஃசிபர் திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்து இருந்த பிரியதர்ஷினி கதாபாத்திரத்தில் தான் நயன்தாரா நடிக்க இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது இத்திரைப்படத்தை நடன இயக்குனராக பிரபுதேவா.

இவ்வாறு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் பிரபுதேவா மற்றும் நயன்தாரா ஒரே படத்தில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபுதேவா சிறந்த பாடல் ஒன்றிற்கு தனது சிறப்பான நடன திறமையை வெளிப்படுத்தியிருக்கிறாம்.