சினிமாவிற்கு அறிமுகமாகி தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து திருமணம் செய்துக் கொண்டு சினிமாவிலிருந்து விலகியவர் தான் நடிகை மீரா ஜாஸ்மின். இவர் கடந்த 2000ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ், மலையாள படங்களில் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வந்த மீரா ஜாஸ்மின் விஜய், விஷால், மாதவன் உள்ளிட்ட பல முன்னணி நொடிகளுக்கும் ஜோடியாக நடித்து பிரபலமானார்.
இவ்வாறு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இவருக்கு சொல்லும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வந்தார். இவ்வாறு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்பொழுது மலையாள திரைப்படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்நிலையில் தற்போது அந்த படம் குறித்த போஸ்டர் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் மீரா ஜாஸ்மின் ஹீரோயினாக நடிக்க இவருக்கு ஜோடியாக தமிழ் நடிகர் நரேன் ஹீரோவாக நடித்து வருகிறார் மேலும் இவர்களுடைய கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு குயின் எலிசபெத் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தினை மலையாள இயக்குனர் பத்மகுமார் இயக்க தற்பொழுது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில் மீரா ஜாஸ்மின் அட்டகாசமான போஸ் கொடுத்துள்ளார். இவ்வாறு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீரா ஜாஸ்மின் சினிமாவிற்கு என்ட்ரி கொடுக்கும் நிலையில் இந்த படம் வெற்றி பெற்றால் கண்டிப்பாக இவர் அடுத்த அடுத்த திரைப்படங்கள் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

இவ்வாறு 40 வயதில் ஹீரோயினாக மீரா ஜாஸ்மின் என்ட்ரி கொடுக்கும் நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் இவர் கிளாமருக்கு கிடைத்த பலனாக இந்த படம் அமைந்திருப்பதாக கூறி வருகின்றனர் மேலும் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.