கிசுகிசுவுக்கு முற்றி புள்ளி வைத்த நடிகை மீனா.. என்ன இப்படி சொல்லிட்டாரு.. இணையதளத்தில் வைரலாகும் செய்தி

meena
meena

திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் பருவ வயதை எட்டிய பிறகு ஹீரோயின்னாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை மீனா. இவர் ரஜினி, சத்யராஜ் சரத்குமார், விஜயகாந்த், முரளி, அஜித் போன்ற டாப் நடிகர்களுடன் கைகோர்த்து ஹீரோயின்னாக நடித்து வெற்றி கண்டார். 90களில் கொடி கட்டி வந்த மீனா 2009 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபர் வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இருவருக்கும் நைனிகா என்ற மகள் இருக்கிறார். அவரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் இப்படி குடும்பமே வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வந்த நிலையில் திடீரென வித்யாசாகர் உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் அதன் பிறகு சில மாதங்கள் வீட்டிலேயே மீனா முடங்கினார் ஒருவழியாக அவருடைய தோழிகள் கொஞ்சம் கொஞ்சமாக..

அவரை வெளியே அழைத்து வந்து மீனாவை பழைய நிலைமைக்கு மீட்டெடுத்தனர். அப்புறம் சந்தோஷமாக மீனா வாழ்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக பல கிசுகிசுக்கள் வெளியாகின்றன இது மீனாவுக்கு ரொம்பவும் கஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம்..

இந்த நிலையில் பல்வேறு கிசுகிசுகளுக்கு அவர் தற்பொழுது முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அதாவது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை மீனா தன் கணவரை நினைத்து கண்கலங்கினார் மேலும் இரண்டாவது திருமணம் குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது..

தன் கணவர் இல்லை என்பதை தன்னால் இன்னும் நம்ப முடியவில்லை என்றும் அதற்குள் இந்த விஷயங்கள் எல்லாம் எப்படி பரவுகிறது என்று தனக்கு தெரியவில்லை எனவும் தற்பொழுது தன் மகளின் எதிர்காலம் பற்றியும் தன் படங்களை தேர்வு செய்வதில் மட்டுமே தனது கவனத்தை செலுத்தி வருவதாக மீனா மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.