21 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் உடன் இணையும் நடிகை லைலா..! அவருடைய குடும்பத்தை பார்த்து உள்ளீர்களா.? இதோ புகைப்படம்

Thalapathy 68 : தளபதி விஜய் நிற்கக்கூட நேரமில்லாமல் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். லியோ படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து உடனே வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகி வரும் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் முழுக்க முழுக்க டைம் ட்ராவல் சம்பந்தப்பட்ட ஒரு என்டர்டைன்மென்ட் படமாக உருவாகி வருகிறது.

படத்தில் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர் என பேச்சிகள் வெளியாகி நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு படகுழு பூஜை போட்டதை அதிகாரப்பூர்வமாக வீடியோவாக வெளியிட்டது அதில் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.

நஷ்டத்தில் இருந்து தப்பித்த விஜயின் லியோ படம்.. எந்த இடங்களில் தெரியுமா.?

தளபதி 68 படத்தில் விஜயுடன் இணைந்து சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் அமீர், மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு, ஜெயராம், பிரேம்ஜி கங்கை அமரன், வைபவ், மோகன், விடிவி கணேஷ், அரவிந்த் ஆகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். தளபதி 68 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

லைலாவும், விஜய்யும்  உன்னை நினைத்து படத்தில் நடித்தனர். சில காரணங்களால் விஜய் விலக பிறகு சூர்யா நடித்து அந்த படம் ஹிட்டானது. 21 வருடங்களுக்கு பிறகு விஜய்யும், லைலாவும் தளபதி 68 படத்தில் இணைந்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது.

குடோனில் தமிழை கட்டி வைத்திருக்கும் மேக்னாவின் மாமா.! உனக்கு சக்காளத்தியா ஒருத்தி வரப்போறா சரஸ்வதிக்கு குறி சொன்ன பாட்டி..

இந்த நிலையில் லைலாவின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.  அதில் லைலா, கணவர் மற்றும் இரு பிள்ளைகளுடன் செம்ம அழகாக போஸ் கொடுத்து எடுத்துக் கொண்டுள்ள புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Laila
Laila