கரகாட்டக்காரன் பட நடிகை கனகாவா இது? முன்னணி நடிகையாக இருந்தும் தற்பொழுது இவருடைய பரிதாப நிலை இதுதான்..

Actress Kanaka: கரகாட்டம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை கனகாவின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சினிமாவை பொருத்தவரை குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே நடிகைகளால் முன்னணி நடிகை என்ற அந்தஸ்துடன் வலம் வர முடியும். எவ்வளவுதான் பிரபலமாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் அந்த நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருவது வழக்கம்.

அப்படி 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை கனகா. இவர் எம்ஜிஆர், சிவாஜி போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் ஆவார். பாடகியாக வேண்டும் என்ற கனவுடன் சினிமாவிற்கு அறிமுகமான கனகா அழகாக இருந்ததால் ஹீரோயினாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

நிக்சனின் கேப்டன்சிக்கு பிக் பாஸ் வைத்த ஆப்பு.! நேரடி நாமினேஷன்.. குத்த போகும் சூனியக்காரிகள்

இந்த சூழலில் 1989ஆம் ஆண்டு இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் இயக்கிய கரகாட்டக்காரன் படத்தில் கனகாவை ஹீரோயினாக நடிக்க வைத்தார். இப்படம் சூப்பர் ஹிட் வெற்றியினை பெற்றது. எனவே கரகாட்டக்காரன் படத்தின் வெற்றினை தொடர்ந்து ஏராளமான மொழி திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

தமிழில் சுமார் 40க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் இவர் மலையாளத்திலும் பிரபலமானார். அப்படி இவர் நடித்திருந்த காட்ஃபாதர் என்ற படம் மலையாளத்தில் சுமார் 434 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. கடைசியாக இவர் 1999ஆம் ஆண்டு வீக்கம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இறுதிச்சுற்று இவருடைய கதையா.? கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா.. சுதா கொங்கராவை வெளுத்து விடும் ரசிகர்கள்

அதன் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்தினார். இவர் சினிமாவில் இருந்து விலக காரணம் காதல் தோல்வியென கூறப்படுகிறது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதனால் தனிமையில் இருந்து வருகிறாராம். தற்பொழுதும் சொத்து பிரச்சனைகள் இருந்து வருவதால் தனது உதவியாளர் ஒருவருடன் இருந்து வருகிறாராம்.

actress kanaka
actress kanaka

இந்நிலையில் பிரபல நடிகை குட்டி பத்மினி அவருடைய வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கனகா ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக இருப்பது தெரிகிறது.