சுந்தர்சியுடன் தலைநகரம் திரைப்படத்தில் நடித்த நடிகையை ஞாபகம் இருக்கிறதா.. ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிட்டாரே..

Actress Jyothirmayi new look photo: ஏராளமான பிரபலங்கள் தாங்கள் அறிமுகமான சில படங்களிலேயே பட்டுத்தொட்டி எங்கும் பிரபலமாகி ஒரு கட்டத்தில் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சினிமா விட்டு விலகியவர்கள் உள்ளார்கள் அப்படி தலைநகரம் பட நடிகை ஜோதிமயியின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

2006ஆம் ஆண்டு சுராஜ் இயக்கத்தில் சுந்தர் சி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற படம் தான் தலைநகரம். இப்படத்தில் சுந்தர் சிவுடன் இணைந்து ஜோதிமயி, வடிவேலு, பிரகாஷ்ராஜ், போஸ் அங்கட் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். மேலும் தலைநகரம் படத்திற்கு டி இமான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகினியை அடிமையாக்க பிளான் போடும் அர்ஜுன் குடும்பம்!! சரஸ்வதியின் நிலையை அறிந்து சந்தோஷப்படும் அர்ஜுன்..

ஜோதிமயி தலைநகரம் படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாக திவ்யா என்ற கேரக்டரில் நடித்திருந்தார் இதில் இவர் நடிகர் வடிவேலு உடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் பிரபலமானது. இவ்வாறு பிளாக்பஸ்டர் கிட்ட அடித்த இப்படத்தில் ஹீரோயினாக நடித்ததால் இவருக்கு தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்கள் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.

Actress Jyothirmayi new look photo
Actress Jyothirmayi new look photo

அப்படி விஜயகாந்த் ஜோடியாக சபரி, ஜீவாவுடன் நான் அவன் இல்லை, சத்யராஜ் உடன் பெரியார் சந்தானத்தின் அறை எண் 305ல் கடவுள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதை அடுத்து கடந்த 2004ஆம் ஆண்டு நிஷாந்த் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆறு ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த தம்பதியினர்கள் ஒரு கட்டத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

Actress Jyothirmayi new look photo
Actress Jyothirmayi new look photo

இதனை அடுத்து மலையாள இயக்குனர் அமல் நீரத் என்பவரை கலந்த 2015ஆம் ஆண்டு  மறு திருமணம் செய்துக் கொண்ட ஜோதிமயி தற்பொழுது மலையாளத்தில் மட்டுமே நடித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு மொட்டை அடித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.