பார்க்க பக்கத்து வீட்டு பெண் போல் இருந்துகொண்டு கோடியில் புரளும் நடிகை தேவயானி.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Actress devayani net worth: சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் ஹீரோயினாக நடித்து வந்து தற்பொழுது சீரியல்கள் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் நடித்து பிசியாக இருந்து வருபவர் தான் நடிகை தேவயானி. மேலும் தொலைக்காட்சிகளில் சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றியுள்ளார். இந்த சூழலில் இவருடைய சொத்து மதிப்பு குறித்த தகவல் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது.

90 கால கட்டத்தில் முன்னணி நடிகையாக தொடர்ந்து பல நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்து தென்னிந்திய சினிமாவில் தனக்கான ஒரு நிரந்தர இடத்தை பிடித்தார். அப்படி தேவயானி அஜித், விஜய் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் சீரியல்களிலும் நடிக்க தொடங்கினார்.

சத்தமே இல்லாமல் சமந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்த நயன்தாரா..! இதுல உள்குத்து இருக்குமோ..

கோலங்கள் என்ற சீரியலின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர் தொடர்ந்து பல சீரியல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை தேவயானி இயக்குனர் ராஜ்குமாரை கடந்த 2001ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவருடைய திருமணத்திற்கு குடும்பத்தினர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் அனைவரையும் எதிர்த்து தனது காதலன் ராஜ்குமாரை திருமணம் செய்துக் கொண்டார்.

இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவ்வாறு சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகை தேவயானி தற்பொழுது வரையிலும் ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டு தான் இருக்கிறார். அப்படி இவருடைய மொத்த சொத்து மதிப்பு சுமார் 10 மில்லியன் டாலர்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

மது போதையில் ராங் ரூட்டில் ஆண் நபருடன் வந்து விபத்தை ஏற்படுத்திய எதிர்நீச்சல் மதுமிதா… பரபரப்பு ஏற்படுத்திய சம்பவம்..

இவருக்கு சென்னையில் பிரம்மாண்டமாக ஒரு வீடு, சொந்த ஊரான ஈரோட்டில் உள்ள அந்தியூரில் பண்ணை வீடு ஒன்றும் இருக்கிறதாம். அந்தியூரில் இருக்கும் இவரது பண்ணை வீடானது இரண்டு ஏக்கர் பரப்பளவில் காணப்படுகிறது இந்த வீட்டில் நினைத்த நேரத்திற்கு எல்லாம் மழை பொய்யும் அளவிற்கு பல செட்டப்புகள் உடன் செய்யப்பட்டிருக்கிறதாம். மதிய வேளையில் வீட்டில் அதிகம் வெயில் அடிக்கும் சமயத்தில் நீர் குழாய் திறந்து விட்டு மழை பெய்ய வைப்பார்களாம்.