தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் தொடர்ந்து சிறப்பான திரைப்படங்களில் நடித்து வந்த பாவனா ஒரு கட்டத்தில் தமிழை தாண்டி மற்ற மொழிகளில் வாய்ப்புகள் அதிகமாக குவிந்ததால் அங்கேயே அதிகம் படம் பண்ணி வந்தார் அந்த வகையில் மலையாளம், கன்னடம் இவருக்கு நல்ல மவுசு இருந்தது.
பாவனா அங்கு தேர்ந்தெடுத்து நடித்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் நல்ல வசூலையும், ஒரு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தொடர்ந்து அங்கேயே தன்னை தக்கவைத்துக் கொண்டார் இப்படி ஓடிக்கொண்டிருந்த இவருக்கு நிஜத்தில் சில சர்ச்சைகளில் சிக்கிய ஒரு கட்டத்தில் மீடியா பக்கமே தலை காட்டாமல் இருந்த வந்தார்.
நடிகை பாவனா நீண்ட நாட்களாக காதலித்து நரேன் என்பவரை ஒரு சமயத்தில் திருமணம் செய்து கொண்டார் அதன் பின் படிப்படியாக சினிமாவிலும் சரி மீடியோ உலகிலும் தென்படுகிறார். நடிகை பாவனா தமிழில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதன்பின் வெயில், தீபாவளி ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.
கடைசியாக இவர் அஜித்துடன் கைக்கோர்த்து “அசல்” படத்தில் நடித்தது தான் கடைசி படமாக அமைந்தது அதன்பின் இவர் மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பெரிதும் விரும்பினார் இப்படி இருக்கின்ற நிலையில் திடீரென உடல் எடையை குறைத்து மீண்டும் சின்ன பெண் போல் மாறி உள்ளார் நடிகை பாவனா.

மீண்டும் உடல் எடையை குறைக்க gym -ல் காலை தூக்கி விரித்து உடற்பயிற்சி செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இன்னும் உடல் எடையை குறைக்காதீர்கள் இப்படி இருந்தால் போதும் எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.