விமர்சனம் செய்தவர்களை வெளுத்து வாங்கிய அதிதி சங்கர்..

atidi-sangar
atidi-sangar

தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குனராக வளம் வந்து கொண்டிருக்கும் சங்கரின் மகள் தற்பொழுது கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ளார் அதாவது அதிதி சங்கர் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இன்ஸ்டாகிராம், டுவிட்டர், யூடியூப் என அனைத்து சோசியல் மீடியாக்களிலும் இவருடைய பேட்டி தான் வைரலாகி வருகிறது. அதாவது அதிதி சங்கர் தற்பொழுது தன்னை பற்றி வரும் சில விமர்சனங்களுக்கு கோபத்துடன் பதில் அளித்துள்ளார். பொதுவாக வாரிசு நடிகர், நடிகைகள் யார் சினிமாவிற்கு அறிமுகமானாலும் விமர்சனங்கள் எழுவது வழக்கம்.

அதேபோல் அதிதி சங்கரை பற்றி இயக்குனர் சங்கரின் மகள் என்பதால்தான் அவருக்கு சினிமாவில் வாய்ப்பு எளிதாக கிடைத்ததாகவும்,அதை வைத்து தான் அவர் முன்னேறுவதாகவும் பல செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற பல விமர்சனங்கள் வெளியாக அதுக்கு பதில் கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நான் நன்றாக பாடுவேன், விருமன் படத்தில் கூட ஒரு பாட்டு பாடி இருக்கேன் அதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் இயல்பாகவே நடிப்பு, டான்ஸ் அனைத்தும் வரும் அதனால்தான் எனக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததே தவிர என் அப்பா பெரிய இயக்குனர் என்பதால் வாய்ப்பு கிடைக்கவில்லை.

டாக்டர் படிப்பை படித்து முடித்ததும் எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை சின்ன வயதிலிருந்தே இருந்தது பிறகு படித்து முடித்தவுடன் அப்பாவிடம் நடிக்க விரும்புவதை பற்றி கூறினேன் என் அப்பாவும் என்னுடைய ஆசைக்கு சம்மதித்தார். அதோடு மட்டுமல்லாமல் சினிமா குறித்து நிறைய விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுத்தார்.

ஆனால் கவர்ச்சியாக நடிப்பதற்கு நோ சொல்லுவிட்டார் இதனால் கவர்ச்சி இல்லாமல் இருக்கும் கதாபாத்திரங்களை தேடித்தான் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு தன்னை பற்றி விமர்சனம் செய்தவர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதிதி கலகலப்பாக பேசுவதால் அனைவருக்கும் இவருடைய பேச்சு, நடவடிக்கை ஆகியவை பிடித்துள்ளது இனிவரும் காலங்களில் அசைக்க முடியாத நாயகிகளில் ஒருவராக அதிதி ஷங்கர் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.