தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் முதலான சில திரைப்படங்களில் அஜித்தின் ரீல் மகளாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்தவர் தான் நடிகை அனிகா. இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாளம் மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமடைந்த இவர் தற்போது கதாநாயகியாக நடித்து வருகிறார்.
16 வயதிலேயே கதாநாயகியாக நடித்து வரும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் ஒரு திரைப்படத்தில் கர்ப்பிணியாக நடிக்க இருப்பதாக கூறிய திரைப்படத்தின் போஸ்டர் வெளிவந்தது வைரலாகி வருகிறது.
அதாவது விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அவர்களின் அடுத்த திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.இத்திரைப்படத்திற்கு வாசுவின் கர்ப்பிணிகள் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
அந்த விஸ்வாசம் திரைப்படத்தின் மூலம் பிரபலமான அனிகா சுரேந்திரன், வனிதா விஜயகுமார், சீதா உள்ளிட்ட இன்னும் சிலர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளதுபோல் இருக்கிறார்கள். தொகுப்பாளரான நீயா நானா கோபிநாத் அவர்கள் மருத்துவர் இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் பாடகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பென்சில் திரைப்படத்தின் இயக்குநாரான மணி நாகராஜ் திரைப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் ஆவின் மோகன் சித்தாரா இசையில்,பிகே வர்மா ஒளிப்பதிவில், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் என் திரைப்படம் உருவாகி வருகிறது.

இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகரும் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த போஸ்டரில் விரைவில் டெலிவரி என குறிப்பிடப்பட்டுள்ளது.இத்திரைப்படம் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.