ஜூம் பண்ணி பாத்தா மூஞ்சில இருக்கிற மொத்த சுருக்கமும் தெரியுது.. 50 வயதில் 20 வயது பெண் போல் ஃபோட்டோ ஷூட்! ஐஸ்வர்யா ராயை கலாய்க்கும் நெட்டிசன்கள்

Aishwarya Rai: நடிகை ஐஸ்வர்யா ராய் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் சமீபத்தில் இவர் நடத்திய போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாக இதனை பார்த்த ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். நடிகைகளை பொறுத்த வரை வயதான பிறகு அவர்களுடைய மார்க்கெட் குறைந்து விடுவது வழக்கம்.

ஆனால் 50 வயதிலும் சினிமாவின் புகழின் உச்சத்தில் இருந்து வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகி ஐஸ்வர்யா ராய் கடந்த அக்டோபர் 4ம் தேதி இரவு மும்பையில் நடைபெற்ற லோரியல் நிகழ்ச்சியில் கருப்பு நிற சல்வாரில் ரசிகர்களை மயக்கும் அழகில் கலந்து கொண்டார். அதில் சில புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட சோசியல் மீடியாவில் வைரலானது.

லியோ ட்ரெய்லர் வெளியீடு.. ரோகிணி தியேட்டருக்கு அட்வைஸ் கூறிய போலீஸார்கள்!

இந்நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் மட்டுமல்லாமல் ஏராளமான பாலிவுட் பிரபலங்களும் கலந்துக் கொண்டனர். அப்படி அதிதி ராவ் ஹைதாரி, சித்தார்த், கௌஹர் கான், மற்றும் பாத்திமா சானா ஷேக் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டு சிவப்பு நிற கம்பளத்தை அலங்கரித்தனர்.

aishwariya rai
aishwariya rai

அப்படிதான் ஐஸ்வர்யா ராயும் எலகண்டான கருப்பு நிற உடை அணிந்துக் கொண்டு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அப்பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஐஸ்வர்யா ராய் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அப்படி சிலர் ஐஸ்வர்யா ராய் வெளியிட்டிருந்த புகைப்படங்களுக்கு கமெண்ட் செய்து இருந்தனர்.

அஜித் – மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளியான “ஆஞ்சநேயா” திரைப்படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.?

aishwariya rai 1
aishwariya rai 1

அதாவது அவர் அந்த பேஷன் நிகழ்ச்சிகள் நேரடியாக எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களில் கொஞ்சம் குண்டாக இருப்பதோடு வேறு மாதிரி இருக்கிறார். ஆனால் அவர் வெளியிட்ட புகைப்படத்தில் கொஞ்சம் ஸ்லிம்மாக இளம் வயது பெண் போல் காட்சி அளிக்கிறார். இவ்வாறு 50 வயதில் 20 வயது பெண் போல் தன்னை காட்டிக் கொள்கிறார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.