தாடியால் மோசம் போன விக்ரம்.. மணிரத்தினத்தின் திரைப்படத்தையே நழுவ விட்டீங்களே..

Actor Vikram: தமிழ் திரைவுலகில் டாப் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் மணிரத்தினத்தின் சூப்பர் ஹிட் படத்தில் சீயான் விக்ரம் நடிக்க மறுத்துள்ளார். தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு மாதிரியான ஸ்டைலுடன் தனது உடலை வருத்திக் கொண்டு நடித்து வரும் முக்கியமான நடிகர் தான் சியான் விக்ரம்.

ஒவ்வொரு படத்திற்காகவும் எந்தவிதமான ரிஸ்க் எடுக்கவும் தயங்காமல் இருந்து வரும் சியான் விக்ரம் சேது படத்தில் இருந்து திறமையை வெளிப்படுத்தி வருகிறார். தற்பொழுது தங்கலான் திரைப்படத்தில் நடித்திருக்கும் நிலையில் இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

நிஜத்தில் இப்படியெல்லாம் நடக்காது.? இந்த கதை வேணாம் இயக்குனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரஜினி.. விருதுகளை குவித்த படம்

சங்கர் இயக்கத்தில் வெளியான ஐ திரைப்படத்திற்காக சுமார் 30 கிலோ வரை உடல் எடையை குறைத்து விக்ரம் தனது நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார். அதேபோல் தற்போது தங்கலான் படத்திற்காக சுமார் 20 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். அதிரடியான ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

அந்த வகையில் தங்கலான் படத்தின் சூட்டிங் என்பது அடிப்பட்டு விக்ரமுக்கு விலா எலும்பு உடைந்தது. இதனை அடுத்து கடைசியாக மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. ஆனால் இதற்கு முன்பு மணிரத்தினத்தின் பட வாய்ப்பு விக்ரம் மறுக்க ஆனால் அப்பாடம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது.

அதாவது மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற பம்பாய் படத்தில் முதலில் சியான் விக்ரமன் நடிக்க வைக்க தான் மணிரத்தினம் முடிவு செய்துள்ளார். ஆனால் அப்பொழுது விக்ரம் வேறு ஒரு படத்தில் நடித்துக் கொண்டு இருந்திருக்கிறார். எனவே பம்பாய் படத்திற்காக மணிரத்தினம் தாடி எடுக்க சொன்னதால் அப்படத்தில் நடிக்க மறுத்துள்ளார் பிறகு இந்த வாய்ப்பு அரவிந்த்சாமிக்கு சென்றுள்ளது.

அப்பா, அம்மாவுக்கு உதவி பண்றது ஒரு குத்தமா.. மகாவை நேரம் பார்த்து போட்டுக் கொடுக்கும் சித்ராதேவி – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

இவ்வாறு அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான பம்பாய் படம் சூப்பர் ஹிட் வெற்றினை பெற்று இவருடைய சினிமா கேரியரில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. விக்ரம் பம்பாய் படத்தின் மிஸ் செய்திருந்தாலும் மணிரத்தினத்தில் ராவணன் மற்றும் பொன்னியின் செல்வன் என இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.