சத்தமே இல்லமால் சைலண்டாக சம்பவம் செய்த விஜய்.! மேடையை அதிரவிட தான் இந்த ப்ளானா..

Actor Vijay: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவாட்டர் ஒன்றியத்திற்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் அது குறித்த தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாக விஜய்க்கு நன்றி கூறி வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்போது தனது 68வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தினை வெங்கட் பிரபு இயக்க GOAT என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருந்து வரும் விஜய் சில காலங்களாக அரசியலில் ஈடுபட இருப்பதாக பல தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் பல நல உதவிகளையும் செய்து வருகிறார். அதன்படி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18ஆம் தேதியில் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்தது.

நியூ இயர் வந்துடுச்சி… ஆனா ஹேப்பி மட்டும் வரல… 2024 கலாய் மீம்ஸ்..

இதில் ஏராளமானவர்களின் வீடுகள் சேதமடைந்து உண்ண உணவும் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டெடுக்கும் பண்ணியில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கலந்து கொண்டனர். இதனை அடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண உதவிகளை நடிகர் விஜய் வழங்கினார்.

மேலும் தூத்துக்குடி வெள்ளப்பெருக்கின் பொழுது பாத்திமா நகரை சேர்ந்த ராபின்சிங் என்பவர் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார் அவரது குடும்பத்தினரை போனில் தொடர்பு கொண்டு விஜய் ஆறுதல் கூறினார். மேலும் ராபின்சிங் குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு லட்சம் நிவாரண நிதியை வழங்கினார். இவரைத் தொடர்ந்து வீடுகளை இழந்த வள்ளி என்பவருக்கு ரூபாய் 50,000, இ சக்தி என்பவருக்கு ரூபாய் 50,000, சங்கரன் என்பவருக்கு ரூபாய் 25,000 மற்றும் வீடுகள் சேதம் அடைந்த 30 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வழங்கினார்.

2023-ல் முன்னணி நடிகைகளை முந்திக்கொண்டு அதிக படத்தில் நடித்த நடிகைகள்.! லிஸ்டில் இடம்பிடித்த ராசியில்லா நடிகை..

இதனை அடுத்து ஐந்து கிலோ அரிசி, சர்க்கரை, ரவை, கோதுமை, சேமியா உப்பு உள்ளிட்ட சமைக்க தேவையான அனைத்து தொகுப்பும் மற்றும் வேஷ்டி, சட்டை, துண்டு ஆகியவற்றை 1500 பேருக்கு விஜய் வழங்கினார். மேலும் 2500 பேருக்கு வடை பாயசத்துடன் அறுவகை விருந்தும் வழங்கப்பட்டது இது ஒரு புறம் இருக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவாட்டார் ஒன்றியத்திற்கு இலவச ஆம்புலன்ஸ் சேவையும் தொடங்கப்பட்டு இருக்கிறது.

தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார் விஜய் இந்த ஆம்புலன்ஸ் சேவை நேற்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது இவ்வாறு விஜய் அரசியலுக்கு வர முடிவு செய்திருக்கும் நிலையில் சமீபகாலமாக அதற்கான வேலையை துவங்கி உள்ளார். அதன்படி தான் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் சைலண்டாக மக்களுக்கு தொடர்ந்து அடுத்தடுத்த உதவிகளை செய்து வருகிறார்.