2023-ல் முன்னணி நடிகைகளை முந்திக்கொண்டு அதிக படத்தில் நடித்த நடிகைகள்.! லிஸ்டில் இடம்பிடித்த ராசியில்லா நடிகை..

Tamil Actress: 2023ஆம் ஆண்டில் அதிக திரைப்படங்களில் நடித்த முன்னணி நடிகைகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் ஏராளமான நடிகைகளுக்கு தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

அப்படி 2023ஆம் ஆண்டு நேற்றோடு நிறைவடைந்த நிலையில் இந்த ஆண்டில் அதிக திரைப்படங்களில் மூன்று நடிகைகள் மட்டுமே நடித்துள்ளனர் அதன் நடிகைகள் குறித்து பார்க்கலாம்.

ஐஸ்வர்யா ராஜேஷ்: கடந்த 2023ஆம் ஆண்டு அதிக திரைப்படங்கள் நடித்து முதல் இடத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளார். இவர் கடந்த ஆண்டு தி கிரேட் இந்தியன் கிச்சன், பர்ஹானா, ரன் பேபி ரன், சொப்பன சுந்தரி, தீரா காதல், புலிமடா உள்ளிட்ட ஆறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஹீரோக்களுடன் கண்டிஷன் போட்டு நடிக்கும் நதியாவை காதலில் சுத்த விட்ட நடிகர்.. ஆசை யாரா விட்டது!

இதில் மலையாளத்தில் 2021ஆம் ஆண்டு வெளிவந்த தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது ஆகும். திருமணத்திற்கு பின் ஒரு பெண் தனது வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்களையும், சோதனைகளையும் சந்திக்கிறார் என்பதை மையமாக வைத்து உருவான படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது உணர்ச்சிபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

மகிமா நம்பியார்: இந்த லிஸ்டில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கும் மகிமா நம்பியார் சாட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மனதையும் கவர்ந்த இவர் 2023ஆம் ஆண்டில் அதிக திரைப்படங்களில் நடித்த நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். அப்படி ஆர்டிஎக்ஸ், வாலாட்டி என்ற இரண்டு மலையாள திரைப்படங்களிலும் 800, நாடு, ரத்தம், சந்திரமுகி 2 என மொத்தம் 6 படங்களில் நடித்துள்ளார்.

வீட்டுக்கு தெரியாமல் கிளாசை கட் அடித்து விட்டு இனியா பார்த்த வேலை.. பாக்கியாவுக்கு ஆதரவு கொடுத்த கோபி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

பிரியா பவானி சங்கர்: செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த பிரியா பவானி சங்கர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பிறகு வெள்ளித்திரையில் தொடர்ந்து நடித்து வரும் பிரியா பவானி சங்கர் தற்போது ஏழு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். அப்படி கடந்தாண்டு 2023ல் மட்டும் ஐந்து திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி ருத்ரன், அகிலன், பொம்மை, பத்து தல, கல்யாண கமனீயம் ஆகிய படங்களாகும்.