நீண்ட இடைவெளிக்கு பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் புதிதாக நடித்து வரும் திரைப்படம் விக்ரம் இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார் இவர் இதற்கு முன்பு தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற ஒரு பிரமாண்ட படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் திரைப் படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது கமலும் இந்த திரைப்படத்தில் தனது பணியை முடிக்க அதிகம் ஆர்வமாக இருக்கிறார். இந்த படத்தில் கமலுடன் சேர்ந்து பகத் பாசில், விஜய்சேதுபதி, நரேன் மற்றும் பல ஜாம்பவான்கள் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதுவரை இந்தப் படத்தில் எந்த நடிகைகள் நடிக்கின்றனர் என்பது மட்டும் மறைமுகமாக வைத்துள்ளது. படக்குழு இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் சேதுபதிக்கு மட்டும் இந்த படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். அந்த மூன்று நடிகைகளுமே புதுமுக நடிகைகள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நடிகைகள் வேறுயாருமல்ல சின்ன திரையில் ஓடிக்கொண்டிருந்த சரவணன் மீனாட்சி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் நடித்த மைனா ஒருவர்.

. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் விஜே மகேஸ்வரி இவரும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த இருவரையும் தொடர்ந்து இளம் சீரியல் நடிகை சிவானி நாராயணனும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறாராம்.
புதுமுக நடிகைகள் மூன்று பேருமே விஜய் சேதுபதியுடன் நடிப்பதால் நடிப்பு என்ன என்பதை கற்றுக் கொள்வதோடு மட்டுமல்லாம அந்த நடிகைகளுக்கு பதற்றம் கொடுக்காமல் செம கூல்லாக கையாண்டு அந்த நடிகருடன் நடித்துள்ளாராம் விஜய் சேதுபதி.