என் அண்ணன் என்னை விட்டு போயிட்டாரு.. நேரில் சென்று ஐஸ் பெட்டியில் இருக்கும் விஜயகாந்தை பார்த்து கதறி கதறி அழுத விஜய்..!

Actor Vijay: நடிகரும் தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நடிகர் விஜய் நேரில் சென்றுள்ளார். சினிமாவில் உயர்த்திவிட்ட நடிகர் விஜயகாந்தை நடிகர் விஜய் மறந்துவிட்டாரா? என பல விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் இன்று நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

வில்லனாக சினிமாவிற்கு அறிமுகமாகி ஹீரோவாக பல திரைப்படங்களில் நடித்து 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தான் கேப்டன் விஜயகாந்த். பொதுவாகவே அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல குணம் இருந்ததால் விஜயகாந்த் ஒரு கட்டத்தில் அரசியலில் நுழைந்தார். தேமுதிக என்னும் கட்சியை தொடங்கி அதன் பிறகு தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் வரை உயர்ந்தார்.

அமிர்தா வா உன்ன நல்லா பாத்துக்குறேன் அழைக்கும் கணேஷ்.. பதட்டத்தில் பாக்கியா குடும்பம் – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

இவ்வாறு நன்றாக முன்னேற்றம் அடைந்த பொழுது உடல்நிலை சரியில்லாமல் தீவிர சிகிச்சையை மேற்கொண்டார். எனவே பெரிதாக விஜயகாந்தால் கட்சி பணிகளில் ஈடுபட முடியவில்லை தேமுதிக கட்சி மீட்டிங், ஆலோசனை கூட்டங்கள் போன்றவற்றில் மட்டுமே பங்கேற்று வந்தார். இதனை அடுத்து உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால் கடந்த மாதம் 18ம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பிறகு சிகிச்சை முடிந்தவுடன் கடந்த 12ம் தேதி டிசார்ஜ் ஆனார் இதனை அடுத்து இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது இந்த சூழலில் நேற்று காலை 6:10 மணி அளவில் காலமானார்.

எனவே இதனை அடுத்து விஜயகாந்த் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா திரை பிரபலங்கள் என பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த சூழலில் இன்று இரவில் நடிகர் விஜய் வாடிய முகத்துடன் நேரில் வந்து விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

actor vijay
actor vijay

விஜயகாந்தின் உடல் அருகே கண்கலங்கி நின்ற விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கு ஆறுதல் கூறினார். விஜய் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் தனது படங்கள் சரியாக ஓடாத காரணத்தினால் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான சந்திரசேகர் விஜயை திரைத்துறையில் வளர்த்து விட வேண்டும் என்பதற்காக விஜயகாந்த்திடம் உதவி கேட்டார் இதனை அடுத்து தான் செந்தூரப் பாண்டி படத்தில் விஜய்க்கு அண்ணனாக விஜயகாந்த் நடித்திருந்தார்.

முரட்டு வில்லனாக நடித்த விஜயகாந்தின் 5 திரைப்படங்கள்..! மார்க்கெட்டை காலி செய்ய தான் இப்படி ஒரு திட்டமா..

இந்த படம் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றியினை தர பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளையும் பெற்றார். இந்த சூழலில் திரைத்துறையில் வளர உதவி செய்த நடிகர் விஜயகாந்தை விஜய் மறந்துவிட்டதாக பலரும் விமர்சனம் செய்தனர். மேலும் விஜயகாந்தின் பிறந்தநாளுக்கும் நடிகர் விஜய் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இந்நிலையில் நேரில் வந்து விஜயகாந்த் உடலுக்கு மரியாதை செலுத்திய நடிகர் விஜய்யின் போட்டோ மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.