மீண்டும் அதே தப்பை செய்யும் விஜய்.! எத்தனை முறை பட்டாலும் திருந்த மாட்டாரா?

leo
leo

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் காட்சிகள், சிகரெட் பிடிப்பது போல் இடம்பெற்றுள்ளது. எனவே அந்த காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பசுமைத் தாயகம் புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தை மீறினால் ஐந்து ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என எச்சரித்துள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிவு அடைந்துள்ளது. இந்நிலையில் இருந்த படத்தின் பர்ஸ்ட் லுக் காட்சிகளை வெளியிட்டு இருக்கும் நிலையில் அதில் விஜய் சிகரெட் பிடிப்பது போல் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது. எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பசுமைத் தாயகம் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், சிகரெட் நிறுவனங்கள் அவர்களின் வாடிக்கையாளர்களையே கொலை செய்கின்றனர் இந்த இழப்பை ஈடு செய்யும் நோக்கத்தில் இளம் வயதினரை புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக்குவதற்காக சினிமா ஹீரோக்களை புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்க செய்கின்றனர். விளம்பரங்களிலும் சுவரொட்டிகளிலும் கதாநாயகன் புகைப்பிடிக்கும் காட்சிகளை விளம்பரம் செய்கின்றனர்.

இவ்வாறு விளம்பரம் செய்வது COTPA 2003 இந்திய புகையிலை கட்டுப்பாட்டுச் சட்டத்தின் படி குற்றம் என்பது தெரிந்தே இந்த விளம்பரங்களை வெளியிடுகின்றனர். நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் விளம்பரத்தில் புகைபிடிக்கும் காட்சியினை தற்போது வெளியிட்டுள்ளனர் அதனை இன்னும் சில நாட்களில் விஜய் நீக்குவார் என தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பே நடிகர் விஜய் அழகிய தமிழ் மகன் படத்தில் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிப்பதற்கு அப்பொழுதே மத்திய சுகாதார அமைச்சராக இருந்த மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து இனி இதுப்போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என விஜய் உறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தினை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி திரைப்படத்திலும் முதல் விளம்பரம் 1.5.2012 வெளியானது அதிலும் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். எனவே இரண்டு 2.5.2012 அன்று காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பசுமைத் தாயகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக 16.5.2012 அன்று காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடந்த விசாரணையில் துப்பாக்கி திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சிகளிடம் பெறாத என அழைக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில் துப்பாக்கி திரைப்படத்திற்கு எதிரான நடவடிக்கைகள் கைவிடப்பட்டது.

இவ்வாறு இந்த பிரச்சனைகளுக்குப் பிறகும் நடிகர் விஜய் சர்க்கார் திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சிகள் நடித்திருந்தார் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் 21.6.2018 வெளியான நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலும் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது இதனை விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இது தொடர்பாக 23.6.2018 அன்று தமிழக பொது சுகாதார துறையினரிடம் பசுமை தாயகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. பொது சுகாதாரத்துறையின் நோட்டீஸ் அனுப்பப்பட்ட பிறகு அவருடைய ட்விட்டர் பக்கத்தில் இருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர் நீக்கப்பட்டது. இவ்வாறு இந்த பிரச்சனைகளுக்குப் பிறகும் நடிகர் விஜய் லியோ திரைப்படத்தில் முதல் விளம்பரத்தில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம் பெற்று இருக்கும் நிலையில் விரைவில் இந்த பஸ்ட் லுக் போஸ்டரும் இன்னும் சில நாட்களில் நீக்குவார்கள்.

ஆனால் 24 மணி நேரத்தில் ஃபர்ஸ்ட் லுக் புகை பிடிக்கும் காட்சியை சுமார் 75 லட்சம் பேர் பார்த்துள்ளனர் அதில் ஏராளமானவர்கள் குழந்தைகளாக இருக்க வாய்ப்புள்ளது அவர்களில் பலரும் புகையிலை பொருட்களை நோக்கி ஈடுபடுவார்கள் அந்த கொடுமைக்கு விஜய் தான் ஒரு முக்கிய காரணமாக இருப்பார்.

COTPA 2003 இந்திய புகையிலை கட்டுப்பாடு சட்டத்தின் 22ஆம் பிரிவின் கீழ் குற்றச் செயலில் முதன் முறையாக ஈடுபடுவதற்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் அதே குற்றத்தை மீண்டும் செய்தால் ஐந்து ஆண்டு தண்டனை அளிக்க வழி செய்யப்பட்டுள்ளதாக பசுமை தாயகம் அமைப்பு தெரிவித்துள்ளது.