விஜயின் தங்கையாக கோட் திரைப்படத்தில் யார் நடித்துள்ளார் பார்த்தீர்களா… வைரலாகும் புகைப்படம்..

Goat movie update: தளபதி விஜய் நடிப்பில் தற்பொழுது கோட் படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் விஜய்யின் தங்கையாக நடிக்கும் பிரபலம் குறித்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் லியோ படத்தின் வெற்றியினை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு தளபதி 68 என அழைக்கப்பட்டு வந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு படத்தின் டைட்டிலுடன் கூடிய போஸ்டரை படக் குழு வெளியிட்டது. இதற்கான படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றார்.

திருநங்கையாக மாறப்போகும் சிம்பு.. இதற்கெல்லாம் காரணம் தனுஷ் தானா.?

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் கோட் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். கோட் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது அப்படி முதல் பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Goat movie update
Goat movie update

மேலும் இப்படத்தில் விஜய்யின் தங்கையாக நடிக்க இருக்கும் பிரபலம் குறித்த புகைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் இளம் வயது விஜய்யின் தங்கையாக பிரபல ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் மகள் அபியுக்தா மணிகண்டன் என்பவர் நடிக்க இருக்கிறார்.

படிக்காதவன் படத்தில் குட்டி ரஜினியாக நடித்த நடிகர் இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.?

இதுதான் அபியுக்தா மணிகண்டனின் முதல் படம் எனவும் கூறப்படுகிறது. தளபதி விஜய் அரசியலில் களம் இறங்க இருப்பதால் விரைவில் கோட் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தனது 69வது படத்தில் இணையவுள்ளார். இதுதான் தளபதி விஜய்யின் கடைசி படம் என்பதால் பிரம்மாண்டமாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.