மூட்டை தூக்கம் தொழிலாளி சூப்பர் ஸ்டாராக வளர்ந்தது எப்படி? ரஜினியின் பிறந்தநாள் ஸ்பெஷல்..

Rajinikanth Birthday: குடும்பத்தின் வறுமையினால் கூலி வேலை செய்து தனது விடாமுயற்சியினால் தற்பொழுது சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் சினிமாவில் கலக்கி வருகிறார். இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 73வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் திரை பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரஜினிகாந்துக்கு ஐந்து வயது இருக்கும் பொழுது அவருடைய அம்மா இறந்து விட்டார் எனவே குடும்பத்தின் வறுமையினால் கூலி வேலை செய்ய தொடங்கியுள்ளார். அப்படி சுமை தாங்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்த ரஜினிகாந்த் பிறகு பஸ் கண்டக்டர் ஆக வேலை பார்த்து வந்தார். இந்த நேரத்தில் நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பராக இருந்த ராஜ் பகதூருக்கு ரஜினிகாந்த் சினிமாவில் நடிக்க விரும்புகிறார்
என்பது தெரியவந்தது.

73 வயதில் கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடிய நடிகர் ரஜினி.. வைரலாகும் புகைப்படம்

எனவே மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் சேருமாறு கூறியுள்ளார். ராஜ் பகதூர் உதவியுடன் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்ற ரஜினிகாந்த் 1975ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் ஹீரோவாக வேண்டும் என லட்சியத்துடன் நெகட்டிவ் ரோலில் நடிக்க ஆரம்பித்தார்.

அந்த வகையில் பில்லா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது இதன் மூலம் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வெற்றியினை கண்ட ரஜினி ஒரு கட்டத்தில் பாலிவுட் படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார். அங்கும் வெற்றினை கண்ட நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் சினிமாவில் கலக்கி வருகிறார்.

பாக்கியா தலையில் இடியை இறக்கிய கோதாண்டம்.. போலீஸ் கேஸ் வரை சென்ற கேண்டின் ஆடர்

இவ்வாறு ரஜினி 73 வயதை தொட்டு இருந்தாலும் தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. அப்படி கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.