தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் ஜெயம் ரவி. இவர் திரையுலகில் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகனாக அறிமுகமானார் இதன் காரணமாகவே அவருடைய பெயர் ஜெயம்ரவி என கருதப்பட்டது.
இவ்வாறு இவர் தமிழ் சினிமாவில் பல மெகா ஹிட் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து இருந்தாலும் ஒரு நேரத்தில் இவர் எந்த ஒரு திரைப் படங்களிலும் நடிக்க முடியாமல் தன்னுடைய மார்க்கெட்டை இழந்து தவித்து வந்தார் அப்பொழுது எடுக்கப்பட்ட திரைப்படம் ஒன்றில் கூட பிரச்சினையின் காரணமாக வெளியிட முடியாமல் முடங்கி விட்டது.
இந்நிலையில் யாராவது தனக்கு கை கொடுக்க மாட்டார்களா என எண்ணியிருந்த நிலையில் அவருக்கு கை கொடுத்த திரைப்படம்தான் பூலோகம். பொதுவாக ஜெயம்ரவி எப்பொழுதும் சமூக ரீதியான திரைப்படங்களில் தான் நடித்து வந்தார் ஆனால் இத்திரைப்படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்து மிரட்டி இருப்பார்.
இவ்வாறு இந்த திரைப்படம் வெளிவந்த பிறகு இவர் மீது இருந்த நெகட்டிவ் வைப்ரேஷன் அனைத்தும் பாசிட்டிவாக மாறிவிட்டது. அதுமட்டுமில்லாமல் மறுபடியும் இவருக்கு ரசிகர் கூட்டம் திரண்டது மட்டுமல்லாமல் அவருடைய மவுசு எகிரி விட்டன.
இந்நிலையில் பூலோகம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் மீண்டும் ஒரு திரைப்படத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ளார். இவ்வாறு இந்த திரைப்படத்திற்கான பேச்சு வார்த்தைகள் கூட சமீபத்தில் முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் மிக விறுவிறுப்பாக இந்த திரைப்படத்தின் பூஜை ஆரம்பித்ததன் பிறகு படப்பிடிப்பு வருகின்ற செப்டம்பர் மாதம் தொடங்கும் என அரசல்புரசலாக சமூகவலைதளத்தில் பேசப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.