வேஷ்டி சட்டையில் தீபாவளியை காதலியுடன் கொண்டாடிய ஜாஃபர் சாதிக்..! அடிபொலி அப்படி ஒரு ஜோடி பொருத்தம்…

Actor Jaffer Sadiq: சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமாகி தற்பொழுது வெள்ளி திரையில் கலக்கி வரும் ஏராளமான பிரபலங்கள் இருக்கின்றனர். அந்த வகையில் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, ஜோடி நம்பர் 1 போன்ற நடன நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர்தான் ஜாஃபர் சாதிக்.

விக்னேஷ் சிவனின் பாவ கதைகள் என்னும் குறும்படத்தின் மூலம் சினிமாவில் பிரபலமான ஜாஃபர் சாதிக். பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த விக்ரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதியின் கூட்டத்தில் ஒருவராக நடித்திருந்த நிலையில் கையில் கட்டிங் பிளேட் வைத்து எதிரிகளின் கால் நரம்பை கட் பண்ணும் காட்சிகள் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்தது.

ஜிகர்தண்டா படத்தில் நான்தான் நடிக்க வேண்டியது.! ஜிகர்தண்டா 3 பார்த்தேன் என என்றாவது ஒரு நாள் பதிவிடுவேன்.! பிரபல நடிகர் அதிரடி பதிவு..

மேலும் கால் நரம்பை வெட்ட முயற்சி செய்யும்பொழுது அவரிடம் மொக்கை வாங்கும் காமெடி காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்தது இதனை அடுத்து சமீபத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தின் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்த இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். ஜெயிலர் படத்தின் ப்ரோமோஷன் பணியில் கலந்து கொள்ளும் பொழுது ஜாஃபர் சாதிக் ரஜினிகாந்திடம் தனது காதலியை அறிமுகப்படுத்தியதாகவும் புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆண்டவருக்கே விபூதி அடிக்க பார்த்த பிரதிப் ரங்கநாதன்.. சைலண்டாக வேலை பார்த்த விக்னேஷ் சிவன்

இதனை அடுத்து தற்பொழுது தனது காதலியுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி இருக்கும் இவர் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜோடி பொருத்தம் பக்காவாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Actor Jaffer Sadiq
Actor Jaffer Sadiq

விரைவில் தன்னுடைய காதலியை கரம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு பிரபலமாகி இருக்கும் ஜாஃபர் சாதிக் தொடர்ந்து அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்று வருகிறார்.