இரண்டே வருடத்தில் 75 திரைப்படங்களை உதறித் தள்ளிய இளம் நடிகர்.! அடேங்கப்பா யாருப்பா அந்த நடிகர்..

Actor Teja Sajja: இளம் நடிகர் ஒருவர் கடந்த இரண்டு வருடங்களில் சுமார் 75க்கும் மேற்பட்ட திரைப்படங்களை நிராகரித்திருக்கும் நிலையில் இவருடைய கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி தான் காரணம் என சினிமா துறையினர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அதாவது இரண்டு ஆண்டில் தனக்கு வந்த 75 பட வாய்ப்புகளை நிராகரித்துள்ளார் இளம் நடிகர் ஒருவர்.

இந்த சூழலில் கடந்த மாதம் இவருடைய நடிப்பில் வெளியான அத்திரைப்படம் உலக அளவில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. இவ்வாறு திரை பிரபலங்கள் இளம் நடிகரின் கதை தேர்வு, கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி தான் என பாராட்டி வருகிறார்கள்.

நடிகர் ஜெய் நிராகரித்த நான்கு பிளாக்பஸ்டர் திரைப்படம் எது தெரியுமா.?

தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகரான 29 வயதாகும் தேஜா சஜ்ஜா. இவர் 2001ஆம் ஆண்டு வெளியான அத்புதம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தின் கிடைத்த வெற்றியை தொடர்ந்து ஏராளமான பட வாய்ப்புகள் இவருக்கு குவிந்தது.

அப்படி சுமார் 75 திரைப்படங்களின் கதையை நிராகரித்த தேஜா சஜ்ஜா ஹனுமான் என்ற ஒரே திரைப்படத்தில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார் கடந்த மாதம் ஹனுமான் படம் இந்தியா முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற வசூலை குவித்தது. இவருடைய நடிப்பையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

முன்பணம் கொடுப்பதற்கு முன்பே அட்ஜஸ்ட்மென்ட்.. கண்ணீர் விட்டு கதறும் இளம் நடிகை.

இந்த படத்திற்காக தேஜா சஜ்ஜா இரண்டு வருடங்களாக பொறுமையுடன் இருந்து வந்த நிலையில் அதற்கான வெற்றியும் கிடைத்திருப்பதால் ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். ஹீரோவாக வெற்றினை கண்டு இருக்கும் தேஜா சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார்.