விஜய்யால் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கிளம்பிய விடாமுயற்சி டீம்.!

Vidaamuyarchi Movie: அஜித் குமார் நடிப்பில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் ஆக்ஷன் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெற்று படமாக்கப்பட்டு வருகிறது. அஜித்தின் 62வது படத்தினை பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க லைக்கா  நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

ஆக்ஷன் என்டர்டைன்மெண்ட் பின்னணியில் உருவாகி வரும் விடாமுயற்சி அஜித்தின் பிறந்தநாளையொட்டி மே மாதம் விடுமுறை நாட்களில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. அஜித் நடிப்பில் கடைசியாக இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு திரைப்படம் வெளியானது.

கலவை விமர்சனத்தை பெற்றாலும் முதல் நாளில் கோடியை கடந்த சந்தானத்தின் 80ஸ் பில்டப்.! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

இப்படத்தினை ஹச்.வினோத் இயக்க ஆக்சன் காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல் வங்கிகளில் மோசடி செய்வது குறித்து உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவானதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த படத்தினை தொடர்ந்து அஜித்தின் 62வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் சில காரணங்களால் இந்த படம் கைவிடப்பட தற்போது மகிழ் திருமேனி படத்தில் கமிட்டாகி இருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது கடந்த சில வாரங்களாக சூட்டிங் நடைபெற்று கொண்டிருக்கிறது இதில் த்ரிஷா மற்றும் ரெஜினா ஆகியோர்களும் கதாநாயகிகளாக இணைந்துள்ளனர்.

கலவை விமர்சனத்தை பெற்றாலும் முதல் நாளில் கோடியை கடந்த சந்தானத்தின் 80ஸ் பில்டப்.! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

அஜர்பைஜானில் தொடர்ந்து ஆக்சன் காட்சிகளுக்கான ஷூட்டிங் நடைபெறும் எனக் கூறப்பட்ட நிலையில் திடீரென்று பட குழுவினர்கள் சென்னை திரும்பினர். அதாவது நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தின் சூட்டிங் அஜர்பைஜானில் திட்டமிடப்பட்டு இருக்கிறதாம் எனவே தான் விடாமுயற்சி டீம் அங்கிருந்து பேக்கப் செய்ததாக தற்பொழுது தகவல் வெளியாகி உள்ளது.

ஏனென்றால் சமீப காலங்களாக  எதிர்பார்க்காத விதமாக ஒரே இடத்தில் இரண்டு நடிகர்களின் ஷூட்டிங் நடைபெறுவதும் வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் கூட ரஜினியின் தலைவர் 170வது படத்தின் ஷூட்டிங் பிரசாந்த் ஸ்டுடியோவில் நடத்தப்பட்டதால் தளபதி 68 டீம் மற்றொரு இடத்திற்கு ஷூட்டிங் ஸ்பாட்டை மாற்றி கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Exit mobile version