ஒரே ஒரு படத்தை இயக்கி விஜய் மனதில் இடம் பிடித்த பிரபல இயக்குனர்.! தளபதி 68 இவர் கூட தானா…

VIJAY
VIJAY

அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் திரைப்படம் தான் லவ் டுடே இன்றைய காதலுக்கு ஏற்றார் போல் சமூக வலைத்தளங்கள் எந்த அளவிற்கு உதவியாக இருக்கிறதோ அதேபோல் அதில் ஆயிரம் ரகசியங்களும் இருக்கிறது என்பதை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த கதையை பிரதீப் ரங்கநாதன் இயக்கி ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

இவர் இதற்கு முன்பு ஜெயம் ரவி யோகி பாபு உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்களின் கூட்டணியில் உருவான கோமாளி திரைப்படத்தினை இயக்கியிருந்தார். மேலும் இன்னும் சில திரைப்படங்களையும் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இந்த திரைப்படங்களினை தொடர்ந்து பிரதீப் லவ் டுடே திரைப்படத்தினை இயக்கி இருக்கிறார்.

மேலும் இந்த படத்தில் முதன்முறையாகவோ ஹீரோவாகவும் நடித்துள்ள இவர் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். எனவே இந்த படம் வெற்றினைத் தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்கள் இவரிடம் கதை கேட்டு வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இந்த திரைப்படம் வெளியான 10 நாட்களில் மட்டும் 50 கோடி வசூல் செய்து இருக்கிறது.

இவ்வாறு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் அளவிற்கு வசூல் சாதனையை பெற்று வரும் நிலையில் இன்னும் சில நாட்களில் 100 கோடியையும் நெருங்க இருக்கிறது. இதன் காரணமாக இவருக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் சமீப பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பிரதீப் தளபதி விஜய்யிடம் கதை சொல்லி இருப்பதாகவும் விஜய் அந்த கதை தனக்கு பிடித்திருப்பதாக சொல்லி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

எனவே நடிகர் விஜய் தற்பொழுது வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் தன்னுடைய 67வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இவ்வாறு இந்த இரண்டு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் பிரதீப் இயக்க இருக்கும் திரைப்படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.