தலைவர் 171ல் ரஜினிக்கு வில்லனாக முன்னணி நடிகரை தட்டி தூக்கிய படக் குழு..

Thalaiver 171: ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171வது படத்தில் நடிக்க இருக்கிறார் இப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 171 என பெயரிடப்பட்டுள்ளது இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க போகும் பிரபல நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இந்த படத்தினை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஞானவேல் ராஜா இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வேட்டையன் படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் சில மாதங்களில் நிறைவடைய இருப்பதாகவும் விரைவில் தலைவர் 171-வது படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

போண்டாமணி மறைந்தாலும் காலத்தால் அழியாமல் இருக்கும் அவர் நடித்த 5 திரைப்படங்கள்.!

தலைவர் 171 படத்தினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் நிலையில் முதன்முறையாக ரஜினி – லோகேஷ் கனகராஜனின் கூட்டணி அமைந்திருப்பதால் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றனர். லியோ படப்பிடிப்பின் பொழுது தலைவர் 171வது படத்திற்கு ரஜினிகாந்த் ஓகே சொல்லிவிட்டார்.

இப்படத்தினை சன் பிரிக்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் நிலையில் இப்படத்திற்கான தயாரிப்பு பணிகள் முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது. அதன்படி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி அல்லது ஏப்ரல் மாதத்தில் தலைவர் 171வது படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் தலைவர் 171 படத்தில் நடிப்பதற்காக நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுக்கும் பணியில் பிஸியாக இருக்கிறார்.

அசால்டாக 50 லட்சத்தை தூக்கி கொடுத்த விஜயகாந்த்.. பழைய நினைவுகளை பகிர்ந்த அமீர்

அந்த வகையில் தற்பொழுது பாலிவுட் பிரபலம் ஒருவர் நடிக்க இருப்பதாக அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி ரஜினியின் 171வது படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி இடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு மாஸ்டர் மற்றும் விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களை விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி இதற்கு மேல் வில்லனாக நடிக்க மாட்டேன் எனக் கூறியிருந்தார் ஆனால் லோகேஷ் கனகராஜ் கேட்டுக் கொண்டதால் ரஜினியுடன் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.