தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா. இவர் ஆந்திர சட்டமன்ற உறுப்பினரும் இந்திய திரைப்பட நடிகரும் அவர். மேலும் இவர் குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போது பல திரைப்படங்களில் நடித்து அறிமுகமானார் நடிகர் பாலகிருஷ்ணா.
அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து தற்போது தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்று தந்தது.
அதாவது கடந்த ஜனவரி 12ஆம் தேதி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான வீர சிம்மா ரெட்டி திரைப்படம் தியேட்டரில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இவருக்கு ஜோடியாக இந்த திரைப்படத்தில் சுருதிஹாசன் நடித்துள்ளார் மேலும் இவருக்கு அம்மாவாக ஹனி ரோஸ் நடித்துள்ளார் இதனால் இவர்கள் இருவரும் பல விமர்சனங்களுக்கு உள்ளானார்கள்.
அந்த வகையில் தனது அப்பா வயது இருக்கும் நடிகருடன் ஜோடி போடுகிறாரா சுருதிஹாசன் என்று விமர்சிக்கப்பட்டார். அதேபோல ஹனி ரோஸ் அவர்களும் 63 வயது நடிகருக்கு 31 வயது நடிகை அம்மாவாக நடிக்கிறார்கள் எப்படி சாத்தியமாகும் என்று பலரும் பல விதமாக விமர்சித்து வந்தனர்.
ஆனால் இந்த படம் வெளியாகி அந்த விமர்சனத்திற்கு அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தது. இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றி விழாவை கொண்டாடும் வகையில் நேற்று வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இந்த வெற்றி விழா முடிந்தவுடன் இரவு பார்டியுடன் மது பார்ட்டியும் நடந்தது.
இந்த பார்ட்டியில் கலந்து கொண்ட பாலகிருஷ்ணா மற்றும் ஹனி ரோஸ் இருவரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். கலந்து கொண்டது மட்டுமல்லாமல் இருவரும் ரொமான்டிக்காக நெருக்கமாக கைகளை பின்னி மது அருந்தி உள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் லீக் ஆகி வைரல் ஆகி வருகிறது.
இதைப் பார்த்த ரசிகர்கள் 63 வயது நடிகருடன் ரொமான்ஸ் செய்து கொண்டு மது அருந்துகிறாரா நடிகை ஹனி ரோஸ் என்று கூறி வருகிறார்கள்.
இது அந்த புகைப்படம்…