90’s நடிகை வினிதா இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.?

90s Actress vinitha: 90 காலகட்டத்தில் சினிமாவில் கலக்கி வந்த நடிகை வினிதாவின் தற்போதைய புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் என்றாலே குறிப்பிட்ட காலம் வரை மட்டும் தான் தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வர முடியும் மேலும் ஒரு சில நடிகைகள் மட்டுமே தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் நடித்து வருகின்றனர்.

சிலர் தங்களுடைய மார்க்கெட் குறைய தொடங்கியவுடன் சினிமாவில் இருந்து விலகி திருமணம் செய்துக் கொண்டு செட்டிலாகி விடுகிறார்கள். அப்படிதான் 90களில் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்து வந்த நடிகை வினிதா சினிமாவை விட்டு ஒரு கட்டத்தில் விலகினார்.

16 வயதினிலே படத்தில் நடித்த டாக்டர் இப்போ எப்படி இருக்கிறார் பாருங்கள்.. ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய புகைப்படம்

1993ஆம் ஆண்டு வெளியான சின்ன ஜமீன் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவர் இதனை தொடர்ந்து கட்டபொம்மன், பாசமலர்கள், ஊழியன், சின்ன மேடம், மிஸ்டர் மெட்ராஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கும் இவருக்கு இளசுகள் மத்தியில் நல்ல மார்க்கெட் இருந்தது ஒரு கட்டத்தில் மார்க்கெட்டை இழந்ததால் சினிமாவை விட்டு விலகினார்.

90s Actress vanitha
90s Actress vanitha

இந்நிலையில் வினிதாவின் தற்போதைய புகைப்படம் வைரலாகி வருகிறது. இதில் ஆல் அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக மாறி உள்ளார் சினிமாவில் ஆக்டிவாக இருந்த காலகட்டத்தில் ஸ்லிம்மாக ரசிகர்களை கவரும் வகையில் இருந்தார். திருமணத்திற்கு பிறகு ஆல் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கும் இவருடைய புகைப்படம் இதோ.

அஜித் படத்தை முதல் நாள் முதல் ஷோ விசில் அடிச்சு பார்ப்பேன் – சூப்பர் ஸ்டார் பகிர்ந்த தகவல்

வினிதாவின் தற்போதைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 90ஸ் நடிகை வினிதாவா இது என ஆச்சரியப்பட்டு வருகின்றனர். கடைசியாக வினிதா 2008ஆம் ஆண்டு வெளியான எங்க ராசி நல்ல ராசி என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தான் சினிமாவை விட்டு விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.