பொங்கல் பண்டிகையில் ஜல்லிகட்டுபோல் மோதிக்கொள்ள போகும் 8 திரைப்படங்கள்.! தனுஷ்க்கு சுத்து போடும் அருண் விஜய்….

2024 pongal released movies: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 8 திரைப்படம் திரையரங்களில் ரிலீசாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர். இந்த சூழலில் கமலின் இந்தியன் 2, சூர்யாவின் கங்குவா, ரஜினியின் லால் சலாம் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய் உள்ளது இந்த சூழலில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகும் படங்கள் குறித்து பார்க்கலாம்.

அயலான்: சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேலாக உருவாகி வரும் அயலான் திரைப்படம் பல்வேறு எதிர்ப்புகளை மீறி வித்தியாசமான கதை அம்சத்துடன் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.

குண்டூர் காரம்: திரி விக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு உடன் இணைந்து ஸ்ரீ லீலா, மீனாட்சி சவுத்ரி, ஜகபதி பாபு ஆகியோர்கள் இணைந்து நடித்திருக்கும் குண்டூர் காரம் திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி ஆந்திராவில் பல திரையரங்குகளில் வெளியாகிறது.

ஆடையின்றி அமர்ந்தேன்.. அப்போ என் மனதில் தோன்றியது – மௌனம் கலைத்த பிரிகிடா சாகா..!

கேப்டன் மில்லர்: சாணி காகிதம் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.

சைந்தவ்: வெங்கடேஷ் நடிப்பில் இருக்கும் பான் இந்திய படமான சைந்தவ் சங்கராந்தி ஸ்பெஷல் ஆக ஜனவரி 13ஆம் தேதி அன்று வெளியாகிறது.

ஹனுமான்: பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா, அமிர்தா ஐயர், சமுத்திரகனி மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கும் ஹனுமான் படம் ஆந்திராவில் சங்கராந்தி முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

மேரி கிறிஸ்மஸ்: விஜய் சேதுபதி பாலிவுட்டில் அறிமுகமாகும் மேரி கிறிஸ்மஸ் படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது இப்படத்தில் மக்கள் செல்வனுக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் நடித்துள்ளார்.

நான் சாமி ரங்கா: இசையமைப்பாளர் கீரவாணியின் இசையில் நாகர்ஜுனா நடித்திருக்கும் அதிரடி ஆக்சன் படமான நான் சாமி ரங்கா படம் ஜனவரி 14ஆம் தேதி சங்கராந்தி ஸ்பெஷல் ஆக வெளியாகிறது.

குறுகிய நாட்களிலேயே வசூலில் 1000 கோடி மிரட்டிவிட்ட 5 திரைப்படங்கள்.! இதோ லிஸ்ட்

மிஷன் சாப்டர் ஒன்: அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மிஷன் சாப்டர் ஒன் திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. அப்பாவிற்கும் மகளுக்கும் இடையேயான பாசப் போராட்டத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் மிஷன் சாப்டர் ஒன் படமும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகிறது.