சிவகார்த்திகேயன் முதல் சதா வரை இன்று பிறந்தநாள் கொண்டாடும் 6 சினிமா பிரபலங்கள்..

Actress Sivakarthikeyan: விஜய் டிவியின் மூலம் அறிமுகமான ஏராளமான பிரபலங்கள் தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலித்து வருகின்றனர்  அப்படி அனைவரையும் தனது காமெடி திறமையினால் கவர்ந்து தனக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இன்று சிவகார்த்திகேயன் தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். சிவகார்த்திகேயன் விஜய் டிவியின் காமெடி நிகழ்ச்சியின் மூலம் தான் பிரபலமானார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இவருடைய பிறந்தநாள் அன்று மேலும் 6 விஜய் டிவி நட்சத்திரங்கள் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர்.

திவ்யதர்ஷினி: விஜய் டிவியின் செல்லப்பிள்ளை தர்ஷினி தொகுப்பாளினியாக பிரபலமாகி தற்பொழுது திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் நயன்தாரா, சிவகார்த்திகேயன் என ஏராளமான சினிமா நட்சத்திரங்களுடன் நெருங்கி பழகி வரும் இவர் இன்று இவரும் தனது 39வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் படுக்கையறை காட்சியில் நடிகையை கசக்கி பிழிந்த நடிகர்.. பயந்து ஓடிய நடிகை..

தாடி பாலாஜி: வெள்ளித்திரை, சின்னத்திரை என கலக்கிய தாடி பாலாஜி பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பணியாற்றி வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட இவர் இன்று தனது 46வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

வடிவேல் பாலாஜி: யாரும் எதிர்பார்க்காத சூழ்நிலையில் திடீரென உயிரிழந்தவர் தான் தாடி பாலாஜி. நகைச்சுவை மற்றும் மிமிக்ரியால் ரசிகர்களை கட்டிப்போட்ட இவர் சிரிச்சா போச்சு, அது இது எது போன்ற காமெடி ஷோக்களில் பங்குப் பெற்ற இவர் இல்லை என்றாலும் இவருடைய நினைவுகள் என்றும் நம்முடன் உள்ளது.

சதா: தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் ஹீரோயினாக சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகை சதா. 2014ஆம் ஆண்டு விஜய் டிவியின் ஜோடி நம்பர் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இன்று பிறந்த நாளை கொண்டாடும் சதாவிற்கு 39 வயது.

விஜே மகேஸ்வரி: சின்னத்திரை, வெள்ளித்திரைகளில் பிஸியாக இருந்து வரும் விஜே மகேஸ்வரி பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குப் பெற்றார். அதன் பிறகு பிஸியாக நடித்து வரும் மகேஸ்வரி இன்று தனது 39 பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

சிறகடிக்க ஆசை விஜயாவின் நிஜ கணவர் யார் தெரியுமா.? வைரலாகும் உருக்கமான பதிவு..

ரியோ ராஜ்: கனா காணும் காலங்கள் என்ற தொடரின் மூலம் அறிமுகமான ரியோ ராஜ் இதனை அடுத்து சரவணன் மீனாட்சி, ஜோடி நம்பர் ஒன், ரெடி ஸ்டெடி போ என தொடர்ந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா மற்றும் பிளான் பண்ணி பண்ணனும் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான ஜோ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது இன்று இவர் தனது 34வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார்.