பணத்தாசை யாரை விட்டது… தயாரிப்பாளராக மாறி மொத்தத்தையும் இழந்த 5 நடிகைகள்…

Tamil Actress: சினிமாவில் பிரபலமாக இருக்கும் ஏராளமான முன்னணி நடிகைகள் நடிப்பதையும் தாண்டி பல தொழில்களில் ஆர்வம் காண்பித்து வருவது வழக்கம். அந்த வகையில் சினிமாவில் கொடிகட்டி பறந்து வந்த நடிகைகள் தயாரிப்பாளராக மாறி தங்களது மொத்த சொத்தையும் இழந்துள்ளனர் அப்படிப்பட்ட ஐந்து நடிகைகள் குறித்து பார்க்கலாம்.

அமலா பால்: நடிகை அமலாபால் தடவியல் நிபுணராக நடித்த படம் கடாவர் இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார். கடாவர் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகி கலவை விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தின் மூலம் நஷ்டம் ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் ஹீரோயினாக நடிப்பதற்கான வாய்ப்பையும் இழந்தார்.

குறுகிய நாட்களிலேயே வசூலில் 1000 கோடி மிரட்டிவிட்ட 5 திரைப்படங்கள்.! இதோ லிஸ்ட்

ரம்பா: 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக கலக்கி வந்த ரம்பாவை தொடை அழகி என அனைவராலும் அழைக்கப்பட்டார். டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த வந்த இவருக்கு 2003ஆம் ஆண்டு பட வாய்ப்புகள் குறைய தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார். அப்படி 2003ஆம் ஆண்டு சக்திபரமேஷ் இயக்கத்தில் ரம்பா, ஜோதிகா, லைலா உள்ளிட்டோர் நடித்த த்ரீ ரோசஸ் என்ற படத்தினை தயாரித்தார்.இப்படம் கலவை விமர்சனத்தை பெற்று கடும் நஷ்டத்தையும் சந்தித்தது இதன் பிறகு சினிமாவில் இருந்தே காணாமல் போனார்.

ராதிகா: வெள்ளித்திரை, சின்னத்திரை என கலக்கி வரும் ராதிகா ராடன் மீடியா என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் மூலம் பல சீரியல்களை தயாரித்து வரும் நிலையில் சீரியல்களுக்கு சமீப காலங்களாக போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. எனவே காதல் கதை, ஜித்தன், மாரி போன்ற படங்களை தயாரித்தார் இதில் ஜித்தன் படம் தோல்வியினை சந்தித்தது.

சாவித்ரி: நடிகர் திலகம் என அழைக்கப்படும் நடிகை சாவித்திரி தமிழ், தெலுங்கு என சினிமாவில் 50, 60 காலகட்டத்தில் திரைவுலகை கலக்கி வந்தார். முதன் முதலில் கார் வாங்கி ஹீரோயின் ஆவார் வீட்டில் நீச்சல் குளம் வைக்கப்பட்டு பல அம்சங்களுடன் வாழ்ந்து வந்த சாவித்ரி ஒரு கட்டத்தில் அனைத்தையும் இழந்தார்.

ஒரிஜினல் ஃபீல் வரவே இல்லை.. நேரம் பார்த்து பொன்னியின் செல்வன் படத்தை விமர்சித்த இளையராஜா!

அதாவது தான் சம்பாதித்த மொத்த பணத்தையும் வைத்து பிராப்தம் என்ற படத்தினை தயாரித்தார் ஆனால் இந்த படம் தோல்வியை அடைய கடும் நஷ்டத்தை சந்தித்தது. மேலும் சிலருடைய சதியால் படங்களை தயாரித்து மொத்த சொத்தையும் இழந்து வீடு வாசலை விற்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டார்.

மனோரமா: காமெடி, குணச்சித்திரம் என பன்முக திறமைகளை கொண்டு விளங்கும் மனோரமா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் 1000 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்தவர். ஆனால் தயாரிப்பாளராக வேண்டும் என்ற ஆசையால் தனது மொத்த சொத்தையும் இழந்தார்.

குடும்பம் ஒரு கதம்பம் என்ற படத்தை தயாரித்தார் இப்படத்திற்கு சொல்லும் அளவிற்கு வரவேற்பு கிடைக்காதில்லை இதனை அடுத்து தூரத்து சொந்தம் என்ற பாடத்தை தயாரித்தார் இப்படமும் தோல்வினை சந்தித்ததால் பெரும் நஷ்டம் ஏற்பட தனது மொத்த சொத்தையும் இழந்தார்.