விஷ பாம்புன்னு தெரியாம வளர்த்து விட்டுட்டியே மக்கா.. சிவகார்த்திகேயனை தூக்கி விட்ட இமானின் 4 படங்கள்

இசையமைப்பாளர் இமான் சமீபத்திய பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார் அவர் பணண விஷயத்தை வெளியே சொல்ல கூடாது என என பரபரப்பை கிளப்பினார். அன்றிலிருந்து சிவகார்த்திகேயன் பெயர் சற்று டேமேஜ் ஆகி உள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன், இமான் கம்போவில் ஹிட் அடித்த 4 படங்களை பற்றி இங்கு விலாவாரியாக பார்ப்போம்..

நம்ம வீட்டு பிள்ளை  : சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவானது படத்தில் எமோஷனல் மக்கள் மத்தியில் கைதட்டல் வாங்கியது. உன் கூடவே பொறக்கணும், மயிலாஞ்சி, கும்முரு டப்பரு பாடல்கள் ஹிட் அடித்தன.

செழியன் போனை பிடுங்கிய பாக்கியா.. விஷயத்தை கோபி கிட்ட சொல்லலாம்னு பார்த்தா குறுக்க நிற்கும் ராதிகா – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் : படம் முழுக்க முழுக்க ரொமான்டிக் மற்றும் காமெடி கலந்த படமாக இது இருந்தது ரசிகர்கள் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது படத்தில் வரும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என தொடங்கும் பாடல், ஊதா கலரு ரிப்பன் பாடல் இளசுகள் மத்தியில் குத்தாட்டத்தை போட வைத்தது.

ரஜினி முருகன்  : சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி ஆகியோர் நடிப்பில் வெளிவந்து பட்டையை கிளப்பிய திரைப்படம் ரஜினி முருகன். படத்தில் காமெடி லவ் சீன் போன்றவை கைதட்டல் வாங்கினாலும் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள உன் மேல ஒரு கண்ணு, ராசாத்தி ராசாத்தி போகாத சூடேத்தி போன்ற பாடல்களில் இன்றும்  ரசிகர்கள் மத்தியில் ஃபேவரட் ஆக இருந்து வருகிறது.

ஏம்பா நீங்க எல்லாம் கார் வாங்கும் போது நான் வாங்க மாட்டேனா.. மார்க் ஆண்டனி படக் குழு ஆதிக் ரவிச்சந்திரனுக்கு கொடுத்த பரிசு..

மனம் கொத்தி பறவை  :  தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணை தேடி தேடி போய் காதலிப்பார் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து விடுவார். கடைசியில் ஒன்று சேர்ந்தார்களா என்பது தான் கதை.. படம் முழுக்க முழுக்க  என்டர்டைன்மென்ட் படமாக இருந்தது. இந்த படத்தில் வரும் டங் டங், ஊரான ஊருக்குள்ள, ஜல் ஜல் ஓசை போன்ற பாடல்கள் ஹிட் அடித்தன. இப்படி சிவகார்த்திகேயன் படங்களுக்கு பார்த்து பார்த்து இசையமைத்தவர் இமான் என்பது குறிப்பிடத்தக்கது.