ஆசை ஆசையாய் வளர்த்த மகள்களை இழந்து வாடும் 3 சினிமா பிரபலங்கள்.! கண்ணீரில் மிதக்க வைத்த இளையராஜாவின் மகள்..

இறப்பு என்பது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.ஆனால் அது இயற்கை, யாராலும் மாற்ற முடியாது.பெற்றவர்கள் இருக்கும் போது பிள்ளைகள் இறப்பது  எவ்வளவு பெரிய கொடுமை என்பது அதை அனுபவிப்பவர்களுக்கு தான் தெரியும்.  பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு. என்பது போல்  பிள்ளைகள் கல்லாய் போனார்.

அப்படி பெற்றோர்கள் தங்களது மகள் அல்லது மகன் யாரேனும் இறந்தால் துடித்துடித்து போவார்கள். அந்த வகையில் தற்போது திரையுலகில் அதிலும் குறிப்பாக இசை துறையில் உள்ளவர்களுக்கு வந்த சோதனை.

ஆசை ஆசையாய் வளர்த்த மகள்களை இழந்து வாடும் 3 சினிமா பிரபலங்கள்.! கண்ணீரில் மிதக்க வைத்த இளையராஜாவின் மகள்..

பாடலாசிரியர் கபிலன், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மற்றும் இசைஞானி  இளையராஜா போன்றோர் தங்களது மகள்களை இழந்து தவிக்கின்றனர். பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை இளம் வயது உடைய இவர் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அரும்பாக்கத்தில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விஜய் ஆண்டனி மகள் மீரா 16 வயதுடைய இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர்  மாதம் திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவள் இறப்பிற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியாமல் குடும்பத்தினர் வருத்ததில் உள்ளனர்.

அதேபோல் தற்பொழுது ஜனவரி 25ஆம் தேதி இசைஞானி இளையராஜாவின் மகள் கேன்சரினால் இலங்கை மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இவரின் உடல் இன்று தான் இளையராஜாவின் சொந்த ஊரான தேனியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. 47 வயதுடைய பவதாரணி பின்னணி பாடகியாகவும் இசையமைப்பாளராகவும் திகழ்ந்தவர். இவர் பாரதி படத்தில் மயில் போல பொண்ணு ஒன்னு, கிளி போல பேச்சு ஒன்னு, குயில் போல பாட்டு ஒன்னு என்ற பாடலை பாடி, அந்தப் பாடலுக்காக தேசிய விருதும் பெற்றுள்ளார்.

பவதாரணி இறுதி சடங்கில் பாட்டு பாடி அஞ்சலி செலுத்திய இளையராஜாவின் குடும்பத்தினர்!! பார்த்து உருகும் ரசிகர்கள்..

இவர் பல  படங்களில் பாடியுள்ளார். இவரின் இழப்பு அனைவரையும் பாதித்துள்ளது. மேலும் இவரின் உடலுக்கு இறுதி சடங்கு செய்யும்போது இளையராஜாவின் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து “மயில் போல பொண்ணு ஒன்னு” என்ற  பாடலை பாடி இறுதி சடங்கு செய்த காட்சி ரசிகர்களை உருகச் செய்துள்ளது. இப்படி மகள்களை இழந்து தவிக்கும் தந்தைகள் இருப்பினும் இப்படி ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது.