பவதாரணி இறுதி சடங்கில் பாட்டு பாடி அஞ்சலி செலுத்திய இளையராஜாவின் குடும்பத்தினர்!! பார்த்து உருகும் ரசிகர்கள்..

ilaiyaraaja family singing song  : இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி கேன்சரினால் ஸ்ரீலங்காவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஜனவரி 25ஆம் தேதி காலமானார். இவர் 1995 ஆம் ஆண்டு ராசையா என்ற திரைப்படத்தில் மஸ்தானா மஸ்தானா என்ற பாடலை பாடி பின்னணி பாடகியாக அறிமுகமானார்.

அதன் பின்னர்  அலெக்சாண்டர், தேடினேன் வந்தது, கருவேலம் பூக்கள், காதலுக்கு மரியாதை, டைம், பாரதி, அழகி, பிரண்ட்ஸ், ஒரு நாள் ஒரு கனவு, மங்காத்தா,  அனேகன் என மேலும் பல படங்களில் பாடியுள்ளார். அது மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் பாரதி திரைப்படத்தில் மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலை பாடியுள்ளார். இந்தப் பாடலுக்காக அவர் தேசிய விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் இவர் பல படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். இப்படி பல திறமைகளை கொண்ட இவர் 47 வயதில் கொடிய நோயினால் காலமாகியுள்ளார். இது இசைஞானி  இளையராஜாவின் குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் திரையுலகிற்கும் மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது.

இந்நிலையில் இவரது உடல் நேற்று  ஸ்ரீலங்காவில் இருந்து  சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. பவதாரணி உடல் பிரபலங்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக  சென்னையில்  வைக்கப்பட்டிருந்தது. பின்னர் நேற்று இரவே அவரது சொந்த ஊரான தேனீக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இளையராஜாவின் பண்ணயபுரத்தில் அவரது உடலுக்கு இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்தனர்.

பவதாரணி இறுதி சடங்கின் போது இளையராஜாவின் குடும்பத்தினர்  அனைவரும் ஒன்று சேர்ந்து தேசிய விருது பெற்ற மயில் போல பொண்ணு ஒன்னு, கிளி போல பேச்சு ஒன்னு, குயில் போல பாட்டு ஒன்னு, மனசு போன இடம் தெரியல, அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல என்ற பாடலை கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா வெங்கட் பிரபு போன்ற அனைவரும் ஒன்றாக சேர்ந்து பாடி இறுதி சடங்கினை செய்தனர். இந்த காட்சியை பார்த்த ரசிகர்கள் இதுவரை இப்படி ஒரு பிரியா விடை யாருக்கும் கிடைத்திருக்காது என வருந்துகின்றனர்.