Big budget 2024: 2024ல் ரிலீஸ் ஆகும் பிரம்மாண்டமான பான் இந்திய படங்கள்.. லிஸ்ட்டில் இடம்பிடித்த கமல், சூர்யா, சிம்பு ..

2024 Top pan indian movies: சமீப காலங்களாக டாப் நடிகர்களின் திரைப்படங்கள் 1000 கோடி தாண்டி வசூல் செய்து வருவதனால் பிரமாண்ட இயக்குனர்கள் நடிகர்களை நம்பி பல கோடி பட்ஜெட்டில் பான் இந்திய படங்களை இயக்கி வருகிறார்கள். இதற்கு முன்பு வெளியான பாகுபலி திரைப்படம் வரலாற்று படமாக உருவாகி பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

பான் இந்திய படமாக பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது அதிகளவில் வரலாற்றுப் பின்புலத்தில் படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் இதில் அனுஷ்கா, பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன், ராணா ஆகியோர்கள் இணைந்து நடித்திருந்தனர் சர்வதேச அளவில் பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

முத்து சொன்ன கார் ஓட்டற வேலையே பரவாயில்ல நீங்க இப்ப பாக்குற வேலைக்கு.. மீண்டும் குடும்பத்தாரிடம் உண்மையை மறைக்கும் மனோஜ்.. துருவி துருவி கேட்கும் ரோகினி..

இப்படத்தின் மூலம் கிடைத்த வெற்றியினாலும் வரவேற்பினாலும் ஏராளமான இயக்குனர்கள் வரலாற்று படங்களை எடுத்து வருகின்றனர். அதன்படி தமிழில் சூர்யா நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகியுள்ளது இப்படத்தை இயக்குனர் சிவா இயக்க 10 மொழிகளில் ரிலீஸ் ஆவதாக கூறப்படுகிறது. மேலும் 3d தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கும் இப்படம் ரிலீசுக்கு முன்பே வியாபாரம் சிறப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிம்பு ஹீரோவாகவும் வில்லனாகவும் நடிக்க இருக்கும் 48வது திரைப்படம் பான் இந்திய படமாக உருவாகவுள்ளது. இப்படத்திற்கு STR48 என்ன தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் போஸ்டர் வெளியானது வரலாற்றின் பின்புலத்தில் உருவாகிக் இருக்கும் இப்படத்தின் சூட்டிங் இந்த ஆண்டு துவங்க உள்ளது.

சிலுக்கு இன்னும் சாகலடா..? எல்லை மீறிய ரித்திகா சிங் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்ங்கள் கமெண்ட்.!

மேலும் கமலஹாசன் நடிப்பில் இந்தியன் 2 மற்றும் ராம் சரணின் கேம் சேஞ்சர் போன்ற இரண்டு பான் இந்திய படங்களையும் சங்கர் இயக்கியுள்ளார். இதேபோல் ராஜமவுலி மகேஷ்பாபு கூட்டணியில் அதிக பொருட்செலவில் பிரமாண்டமான படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.