2023 என் கையில தான்.. அடுத்த வருடத்தை சொல்லவா வேண்டும்.! 2024 யை ஆக்கிரமித்த sj சூர்யா.. ஆத்தாடி இத்தனை திரைப்படங்களா..

Sj suriya : நடிகர் எஸ் ஜே சூர்யா 1988 ஆம் ஆண்டு பாண்டியராஜனின் நெத்தியடி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். எஸ் ஜே சூர்யா வின் நடிப்பை யாராலும் மறக்க முடியாத அந்த அளவு நடிப்பு அரக்கனாக ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இயக்குனர் என்ற கனவோடு தமிழ் திரை உலகிற்கு பயணிக்க வந்தவர் எஸ் ஜே சூர்யா.

சுமார் 11 வருட போராட்டங்களுக்குப் பிறகு 1999 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வாலி என்ற திரைப்படத்தின் மூலம் அவருடைய கனவு நினைவானது. தமிழ் சினிமாவிற்கு பல நல்ல திரைப்படங்களை இயக்கியுள்ளார் ஆனால் அதைவிட பல திரைப்படங்களில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஈர்த்து வந்தார் 2023 ஆம் ஆண்டு எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக உரு மாறியது.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ஆன் போட்டியாளருடன் ஆட்டத்தை ஆரம்பித்த ஜோவிகா.! வைரலாகும் புகைப்படம்.

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டில் பல திரைப்படங்கள் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கிறது அதிலும் குறிப்பாக ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் அவர்களுடன் முதன்முறையாக எஸ் ஜே சூர்யா இந்தியன் 2 திரைப்படத்தில் இணைந்துள்ளார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் அவர்கள் இரண்டாவது முறையாக தானே இயக்கி நடித்து வரும் ஐம்பதாவது திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் எஸ் ஜே சூர்யா.

எஸ் ஜே சூர்யா தனுஷ் அவர்களுடன் முதன் முறையாக இணைகிறார் அதேபோல் பிரதீப் ரங்கநாதனின் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாகவும் இந்த  திரைப்படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்தது அதேபோல் இந்த திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யாவும் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

23 வயது இளம்பெண்ணை வளைத்து போட்டு தனிமரமான பப்லுவின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

இதனைத் தொடர்ந்து நெல்சன் திலிப் குமாரின் ஜெயிலர் திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து அவருடைய உதவி இயக்குனர் சிவபாலன் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய திரைப்படத்தை நெல்சன் தயாரிக்க இருக்கிறார் அந்த திரைப்படத்தில் கவின் தான் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்திலும் எஸ் ஜே சூர்யா அவர்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படி தமிழில் பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ள எஸ் ஜே சூர்யா இந்தியன் 2 திரைப்படத்தோடு இணைந்து தெலுங்கில் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். இப்படி எஸ் ஜே சூர்யா 2024 ஆம் ஆண்டு ஆக்கிரமிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் நாட்டில் முதல் 100 கோடி, 200 கோடி வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.? வியந்து போன கமல், விஜய்