150 படத்துல போலீஸ், மொத்தம் 215 படம் நடிச்சிட்டேன் – ஒருதடவை கூட அஜித் படத்துல நடிக்க முடியல.! இப்பவும் வருத்தப்படும் பிரபல நடிகர்.

ajith

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அஜித். சமிப காலமாக தொடர்ந்து சிறப்பான திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் மக்கள் மன்றம் ரசிகர்கள் இவரது கொண்டாடி வருகின்றனர். ஹச்.வினோத்துடன் இரண்டாவது முறையாக இணைந்து வலிமை என்ற படத்தின் தல அஜித் நடித்து முடித்து உள்ளார்.

படம் வருகின்ற 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. படத்தை மிகப் பெரிய அளவில் கொண்டாட தல ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் தமிழ் சினிமாவில் குணச்சித்திர மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் மீசை ராஜேந்திரன். தமிழை தாண்டி பிற மொழிகளிலும் நடித்துள்ளார்.

இதுவரை அவர் 215 படங்களில் நடித்திருக்கிறாராம். 150க்கும் மேற்பட்ட படங்களில் அவர் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இவர் சில முக்கியமான படங்களில் சில சிறப்பான ரோல்களில் நடித்துள்ளார் அந்த வகையில் சாமி, பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்களில் இவரது நடிப்பு சிறப்பாக இருக்கும்.

மீசை ராஜேந்திரன் தென்னிந்திய திரை உலகில் பல டாப் நடிகரின் படங்களில் நடித்திருந்தாலும் இதுவரை தல அஜீத்துடன் மட்டும் எந்த திரைப்படத்திலும் நடித்தது இல்லையாம் அது அவருக்கு மிகப்பெரிய ஒரு வருத்தத்தை இன்று வரையிலும் கொடுத்துக் கொண்டே இருக்கிறதாம். ஒரு கட்டத்தில் அஜித்தின் திருப்பதி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

meesai rajendran
meesai rajendran

ஆனால் அப்போது அவர் தெலுங்கு படத்தில் மீசையை எடுத்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதனால் அந்த வாய்ப்பு முற்றிலுமாக கை நழுவி போனது அதை உணர்ந்து கொண்ட மீசை ராஜேந்திரன் அதன் பிறகு மீசையை எடுக்காமல் தனது அடையாளமாக வைத்து இருந்து வருகிறார். இச்செய்தி சமூகவளைத் பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது.