பாலிவுட்டிலும் தனது சித்து வேலையை காட்டிய அட்லீ – கமல் படத்தின் காப்பியா.. ஷாருக்கான் படம்.?

atlee
atlee

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்து பின் இயக்குனராக அவதாரம் எடுத்து வெற்றிகளை அள்ளியவர் அட்லீ. முதலில் ராஜா ராணி என்னும் திரைப்படத்தை எடுத்து வெற்றி கண்டார் அதன்பின் தளபதி விஜயை வைத்து  மெர்சல், தெறி, பிகில் ஆகிய மூன்று வெற்றி படங்களை கொடுத்தார்.

மீண்டும் தளபதி விஜய் அல்லது மற்ற டாப் ஹீரோக்களை வைத்து தமிழில் படம் பண்ணுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அட்லீ திடீரென பாலிவுட் பக்கம் போய் ஷாருக்கானுக்கு ஒரு புதிய கதையை சொல்லி படத்தை இயக்கி வருகிறார் அந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாகவும் பிரியாமணி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

மேலும் யோகி பாபு காமெடியானவும் நடிக்கிறார் இந்த படத்திற்கு முதலில் லயன் என பெயர் வைக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அந்த பெயர் மாற்றம் செய்துள்ளது படக்குழு ஷாருக்கான் நடிக்கும் இந்த படத்திற்கு “ஜவான்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து நிலையில் டிரைலரை நோக்கி படக்குழுவினர் நகர்ந்துள்ளது அதற்கான வேலைகளை தான் பார்த்து வருகிறதாம்.

இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடித்து உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் ஷாருக்கான் RAW அதிகாரியாக நடிக்கிறார் அவரது மகன் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தெரிவிக்கின்றன.

இதை தமிழில் அப்படியே கமல் கதாபாத்திரத்தில் வைத்து பார்த்தால் இந்தியன் படம் தான் ஞாபகத்திற்கு வருகிறது. இதை அறிந்த நெட்டிசன்கள் பலரும் இந்தியன் படத்தை அப்படியே காப்பி  அடிக்கிறீர்களா  என நெட்டிசன்கள் கூறி விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.