ஜாம்பி திரைப்படம் இப்படித்தான் எடுத்தார்களா வைரலாகும் மேக்கிங் வீடியோ.!

0

யாஷிகா ஆனந்த், யோகிபாபு, கோபி, சுதாகர், டி எம் கார்த்திக், மனோபாலா அன்புதாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், சித்ரா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜாம்பி இந்த திரைப்படத்தை எஸ் 3 பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இணைந்து தயாரித்துள்ளார்.

புவன் நல்லான் இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு பிரேம்ஜி தான் இசையமைத்துள்ளார், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் தான் முடிவடைந்தது இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகிய ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.

வருகின்ற செப்டம்பர் 6 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்த திரைப்படத்தின் மேகிங் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

இதற்கு முன் வெளியாகிய மிருதன் படத்தை தொடர்ந்து தமிழில் வெளியாகும் ஜாம்பி வகை திரைப்படமாக இந்த திரைப்படம் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.