ஜீ தமிழின் சீதாராமன் என்ற புதிய சீரியலில் இணைந்துள்ள சன் டிவி ரோஜா சீரியல் நடிகை.! வைரலாகும் ப்ரோமோ..

0

புதிதாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெறும் திரைப்படங்களின் பெயரை மையமாக வைத்து சின்னத்திரையில் சீரியல்கள் இயக்குவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர் அந்த வகையில் தற்பொழுது ஜீ தமிழில் சீதா ராமன் என்ற பெயரில் புதிய சீரியல் அறிமுகமாக இருக்கும் நிலையில் அது குறித்த புரோமோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

தமிழ் சின்னதுரையில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜீ தமிழில் தொடர்ந்து ஏராளமான நல்ல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் புதிதாக சீதா ராமன் என்ற புதிய சீரியலை இயக்க இருக்கிறது அந்த சீரியலின் ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ள நிலையில் அதில் புதிதாக திருமணமான பெண்கள் தங்கள் மாமியார் வீட்டில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

இந்த சீரியலின் தயாரிப்பாளர் வெளியிட்ட புரோமோவில் புதிதாக திருமணமான மணமகள் தனது மாமியார் வீட்டிற்கு வெளியே மழையில் அழுதுக் கொண்டே நிற்பதை காண முடிகிறது அந்த வகையில் சீதாராமன் சீரியலில் ஹீரோவின் அம்மாவாக பிரபல நடிகை ரக்ஷா நடித்துள்ளார். மேலும் இந்த சீரியலில் கதாநாயகியாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியலின் மூலம் பிரபலமான பிரியங்கா தான் நடிக்கிறார்.

இவ்வாறு இந்த சீரியலின் ப்ரோமோ வெளியாக இருந்தாலும் எப்பொழுதிலிருந்து வெளியாகும் என தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் பிரபல நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த சீதா ராமம் என்ற பட கதையினை மையமாக வைத்து இந்த சீரியல் சீதாராமன் என பெயரிடப்பட்டு ஒளிபரப்பாக இருக்கிறது.

இந்த சீரியலின் டைட்டில் ஒரு பக்கம் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மற்றொருபுறம் நடிகை பிரியங்கா நடிக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது ஏனென்றால் இவர் ரோஜா சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.