ஜீ தமிழ் டிவி-யில் சத்யா சீரியலில் நடிக்கும் ஆயிஷாவா இது.! லாக் டவுனில் ரசிகர்களை லாக் செய்துவிட்டாரே.!

ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சத்யா என்ற நாடகம்  மிகவும் பிரபலமானது .  அதில் ஆயிஷா அவர்கள் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவருடைய தோற்றம் ஆணை போலவே இருக்கும் பேண்ட் மற்றும் சட்டை அணிந்திருப்பார்.

அதில்  இவர் மிகவும் துறுதுறவெனவும் மற்றும் தைரியமான பெண்ணைப் போலவும்  நடித்திருப்பார். இவருக்கு ஜோடியாக விஷ்ணு  அவர்கள் நடித்து வருகிறார். தற்போது ஊரடங்கு உத்தரவின் காரணமாக  சீரியலில் நடிப்பது தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது நாம் அனைவருக்கும் தெரியும்.

இவர் சன் டிவியில் ஒளிபரப்பான மாயா சீரியலில் முதலில் நடித்தார். அதன் பிறகு தான் ஜீ தமிழில் நடித்து வருகிறார். இதுமட்டுமல்லாமல் வேறு மொழி  சீரியல்களிலும் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளாராம் என செய்தி வெளியாகியுள்ளது. இவர் சிறிது காலத்திற்கு முன்பு காதலித்து வந்தார் சத்யா நாடகத்தில் நடிப்பதால் பிரேகப் ஆகிவிட்டதாம் இதனைத் தொடர்ந்து சத்யா சீரியலில் ஆயிஷாவுக்கு ஜோடியாக நடிக்கும் விஷ்ணு அவர்களை காதலித்து வருகிறாராம் என பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இணையதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது .இதோ அந்த  புகைப்படம்.

ayisha
ayisha
ayisha
ayisha
ayisha
ayisha

Leave a Comment