9வருட போராட்டத்திற்கு பிறகு ஹீரோயினாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்ற ஜீ தமிழ் சீரியல் நடிகை.! அவரே வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு.

தற்பொழுதெல்லாம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்றால் முதலில் சின்னத்திரை நடிக்க வேண்டும் ஏனென்றால் தொடர்ந்து அந்த நடிகர் நடிகைகளை பார்ப்பதனலோ என்னவோ ரசிகர்களுக்கு அவர்களை மிகவும் பிடித்து விடுகிறது முக்கியமாக நடிகைகள் தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பிரபல சீரியல் நடிகை ஒருவர் ஒன்பது வருட போராட்டத்திற்குப் பிறகு எனக்கு ஹீரோயினாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது என்று நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார் இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக அனைவரும் அந்த நடிகைக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

ஜீ தமிழில் ஒளிபரப்பு வந்த சித்திரம் பேசுதடி, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட இன்னும் சில சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் நடிகை ஸ்வேதா ஸ்ரிம்டன். இவர் தொடர்ந்து வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்ததால் ஹீரோயினாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை ஆனால் ஸ்வேதாவுக்கு சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பது மிகவும் ஆசையாம்.

எனவே எப்படியாவது சினிமாவில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக குறும்படங்கள் மற்றும் ஆல்பம் பாடல்கள் போன்றவற்றில் பணியாற்றி வந்தாராம். அதன் பிறகு ஆடை மற்றும் நயம் போன்ற படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்திருந்தார். இப்படிப்பட்ட நிலையில் திரைப்படங்களில் நடிப்பதற்கான சரியான வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சீரியலில் நடிப்பதை தொடர்ந்தார்.

Swetha
Swetha

தற்பொழுது இவருக்கு ஹீரோயினாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆமாம் இவர் நடிக்கவுள்ள இந்த சீரியலை இயக்குனர் தம்பி ராமையா இயக்க இருக்கிறார் மேலும் இந்த சீரியலுக்கு ராஜகிளி என பெயர் வைத்துள்ளார்கள் இந்த சீரியலின் கதாநாயகியாக ஸ்வேதா நடிக்க இருக்கிறார்.

இந்த சீரியலின் பூஜை நடந்துள்ள புகைப்படங்களை வெளியிட்டு 9 வருட போராட்டத்திற்கு பிறகு என்னுடைய வாழ்க்கையில் அடுத்த கட்டத்தில் கால் எடுத்து வைக்கிறேன் என அவர் கூறிய நிகழ்ச்சியான பதிவு ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. பலரும் ஸ்வேதாவிற்கு தனது வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

Leave a Comment