வெள்ளித்திரையில் உள்ள நடிகைகள் எப்படி ரசிகர்கள் பிரபலமடைந்து இருக்கிறார்களோ அவர்களை விடவே அதிக ரசிகர் பட்டாளத்தை சின்னத்திரை நடிகைகளுக்கும் உருவாக்கியுள்ளது. தற்பொழுது சீரியல்கள் தான் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது.
அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது.அந்தவகையில் ஜீ தமிழ் சீரியலில் நடிக்கும் நடிகைகளின் கணவர்கள் யார் என்பதை தற்போது காண்போம்.
நட்சத்திரா : யாரடி மோகினி சீரியலில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நட்சத்திரா. அவருடைய கணவர் ராம்தேவ்.

தனலட்சுமி: பூவே பூச்சூடவா சீரியலில் நடிகை தனலக்ஷ்மி நடித்து வருகிறார். அவருடைய கணவர் சிவா.

பிரியா ராமன் : வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக ஜொலித்து வந்தவர் தான் நடிகை பிரியாராமன்.இவர் தற்போது ஜீ தமிழில் செம்பருத்தி சீரியலில் அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் நடிகர் ரஞ்சித்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்து விட்டார்கள்.

ஃபரினா ஆசாத் : இவர் தற்பொழுது பாரதிகண்ணம்மா சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் வில்லி கேரக்டரில் நடித்து வருகிறார். இவருடைய கணவர் ரகுமான் உபய் ஆவார்.

ரேஷ்மா: பூவே பூச்சூடவா சீரியலில் சக்தி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ரேஷ்மா. அதே நாடகத்தில் நடிகர் மதன் பாண்டியனை காதலித்து வருகிறார். அவர்கள் விரைவில் காதல் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெனிஃபர் : செம்பருத்தி சீரியலில் வில்லியாகவும், காமெடியாகவும் நடித்து வருபவர் தான் ஜெனிபர். இவர் சரவணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

சத்யா சாய் : ராஜா மகள் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சத்யா சாய். இவருடைய கணவர் சத்யபிரகாஷ்.

பரதா நாயுடு : செம்பருத்தி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் பரத நாயுடு. அவருடைய கணவர் பரத்.

அஸ்வினி ராதா : ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் தான் அஸ்வினி ராதா. அவருடைய கணவர் தும்.

மின்னல் தீபா : யாரடி மோகினி சீரியல் வில்லி கேரக்டரில் நடித்து வருபவர் தான் மின்னல் தீபா. அவருடைய கணவர் ரமேஷ்.
