சன் டிவி வேண்டாம் ஜீ தமிழ் தான் பெஸ்ட் என்று ரீ என்ட்ரி கொடுக்கும் சீரியல் நடிகை.!

0
serial-actress
serial-actress

தற்பொழுது எல்லாம் தொடர்ந்து தமிழ் சீரியலில் மற்ற மாநில நடிகைகளும் அறிமுகமாகி வருகிறார்கள். மேலும் அதே போன்று நடிகைகளுக்கும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.  அந்த வகையில் பெங்களூரில் பிறந்து தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து சின்னத்திரையில் அசத்தி வருபவர் தான் நடிகை ஆஷிகா கோபால் படுகொன்.

இவர் நிஹாரிகா என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்தார். மேலும் அறிமுகமான தனது முதல் செயலிலேயே ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.  மேலும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்ததால் தொடர்ந்து ஏராளமான சிறுவர்கள் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

மேலும் த்ரிவேணி சங்கமம் தொடரின் ஹீரோயினாக அறிமுகமானார்.  இதனைத் தொடர்ந்து ராஜா ராணி சீரியலின் ரீமேக்கான kathalo rajakumari தொடரில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அடுத்ததாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தமிழ்ச்செல்வி தொடரில் ஹீரோயினாக நடித்த தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.

மேலும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் 2021ஆம் ஆண்டு சேட்டன் ஷெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள மாரி என்ற சீரியலில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.  மேலும் இந்த சீரியலில் ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்க வைக்கிறார்கள் தற்போது வெளிவந்து வைரலாகி வருகிறது.