ஜீ தமிழில் ஹிட் சீரியலுக்கு என்ட்ரி கொடுக்கும் சன் டிவி சீரியல் நடிகர் .!

பொதுவாக ஏராளமான நடிகர், நடிகைகளுக்கு தொடர்ந்து அவர்கள் சினிமாவில் நடித்து வந்தாலும் பெரிதாக பிரபலம் கிடைக்காத காரணத்தினால் அவர்களால் சினிமாவில் முன்னேற முடியாமல் இருந்து வரும் நிலைமை ஏற்படுகிறது. அந்த வகையில் தற்பொழுது பல வருடங்களாக சின்னத்திரையில் நடித்து வரும் நடிகர் தான் சாம்.

இவர் பல நாடகங்களில் நடித்துள்ளார் மேலும் சில திரைப்படங்களிலும் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவருக்கு பெரிதாக பிரபலம் கிடைக்காத காரணத்தினால் தற்பொழுது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் ஒன்று இருக்கு ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

அதாவது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வந்த அருவி சீரியலில் ஹீரோவின் அண்ணனாக நடித்து வந்தார். சின்னத்திரையில் தொடர்ந்து நடித்து வரும் இவருக்கு பெரிதாக பிரபலம் கிடைக்கவில்லை சில காரணத்தினால் தற்பொழுது நல்ல ஒரு சீரியலில் நடிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளார்.

Sham
Sham

அந்த வகையில் தான் தற்பொழுது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல் ஒன்றில் அறிமுகமாக உள்ளார் நடிகர் சாம். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகமாகி தற்பொழுது நல்ல வரவேற்பினை பெற்று வரும் சீரியல்களில் ஒன்றுதான் கண்ணத்தில் முத்தமிட்டால்.

இந்த சீரியலில் அகிலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் சாண்டியா திடீரென்று சில தவிர்க்க முடியாத காரணத்தினால் விலகிவுள்ளார். இவ்வாறு நடிகர் சாண்டியா நடித்து வந்த அகிலன் கதாபாத்திரத்தில் தான் சாம் நடிக்க இருக்கிறார். சாண்டியாவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அவர் திடீரென்று விலகியதால் ரசிகர்கள் பெரிதும் வருத்தத்தில் இருந்து வருகிறார்கள் எனவே அந்த வருத்தத்தினை சாம் போக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment