அபி டெய்லர் சீரியலில் புதிதாக என்றி கொடுக்கும் ஜீ தமிழ் பிரபலம்.! வைரலாகும் ப்ரோமோ..

0
abi tailar
abi tailar

சமீப காலங்களாக அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களை ஒளிபரப்புவது மட்டுமல்லாமல் புதுமுக நடிகர்,நடிகைகளை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ஜீ தமிழ், விஜய் டிவி, சன் டிவி போன்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பூவே பூச்சூடவா சீரியலின் மூலம் ஹீரோயினாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து சின்னத்திரைக்கு அறிமுகமானவர்தான் நடிகை ரேஷ்மா முரளிதரன்.  இவர் கருப்பாக இருந்தாலும் சிறந்த நடிப்பின் மூலம் தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

இவர் இந்த சீரியல் முடிந்த பிறகு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் அபி ட்ரைலர் தொடரில் ரேஷ்மா ஹீரோயினாகவும் மதன் ஹீரோவாகவும் நடித்து அசத்தி ரசிகர்களின் பேவரைட் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.  இவர்களைத் தொடர்ந்து சோனா, ரேஷ்மா பசுபுலேட்டி உள்ளிட்ட இன்னும் பல முன்னணி நட்சத்திரங்களும் இத் தொடரில் நடித்து வருகின்றனர்.

ரேஷ்மா பூவே பூச்சூடவா திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது மதனும் நடித்து வந்தார் என்பது தான் தெரிந்த ஒன்றுதான். இந்த சீரியல் நடிக்கும் பொழுது இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டதால் சமீபத்தில் குடும்பத்தினர்கள் சம்மதத்துடன் மிகவும் கோலாகலமாக திருமணம் நடந்துமுடிந்தது.

தற்பொழுது இவர்கள் ஒன்றாக இணைந்து அபி ட்ரைலர் சீரியலில் நடித்து வருகிறார்கள்.  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் புதிதாக பிரபல நடிகர் ஒருவர் அறிமுகமாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.

அதாவது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த கோகுலத்தில் சீதை சீரியலில் ஹீரோவாக நடித்திருந்த நந்தா சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். அந்த ப்ரோமோவை கலர்ஸ்-தமிழ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.