ரீல் ஜோடிகளாக நடித்து வந்து ரியல் ஜோடியாகும் ஜீ தமிழ் பிரபலங்கள்.! நிச்சயதார்த்த புகைப்படம் இதோ..

zee-tamil-actress
zee-tamil-actress

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சிகளாக வலம் வந்து சன் மற்றும் விஜய் டிவியில் தொடர்ந்து ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் மூலம் அறிமுகமாகும் பல பிரபலங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ரீல் ஜோடியாக அறிமுகமான பிரபலங்கள் தற்பொழுது உண்மையில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் அது குறித்த புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.

இதற்கு முன்பு ஏராளமான பிரபலங்கள் ஒரே சீரியலில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி பிறகு திருமணம் செய்து கொண்டவர்கள் பலர் உள்ளார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி 2 சீரியலின் மூலம் பிரபலமானவர் தான் பிரிட்டோ. இதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியிருந்தார் இதற்கு முன்பு இவர் ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்பொழுது இவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து சீரியலில் நடித்து வருகிறார்.

thavamayi thavam irunthu
thavamayi thavam irunthu

இவர் ஹீரோவாக பாண்டி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் இந்த சீரியலில் மலராக  சந்தியா ராமச்சந்திரன் நடித்து வருகிறார். இவ்வாறு பாண்டி – மலர் ஜோடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே இந்த சீரியலில் சந்திர ராமச்சந்திரன் மற்றும் பிரிட்டோ இருவரும் இணைந்து நடிக்கும் பொழுது இவர்களுக்கிடையே நிஜ வாழ்க்கையில் காதல் ஏற்பட்டுள்ளது.

zee tamil actress
zee tamil actress

எனவே இவர்கள் இருவரும் சில மாதங்களாக காதலித்து வந்த நிலையில் தற்பொழுது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வர சின்னத்திரையில் அடுத்த ஜோடி என கூறி வருகிறார்கள் ஏனென்றால் இதற்கு முன்பு ஏராளமான பிராப்ளங்கள் இவ்வாறு ஒரே சீரியலில் நடித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களை தற்போது வாழ்த்தி வருகின்றனர்.

மேலும் இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக அதில் ஜனவரி 25ஆம் தேதி நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இதோ அந்த புகைப்படம்.