இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் திமிர் பேச்சு.! மூக்கை உடைத்து கதறவிட்ட யுவராஜ் சிங்

0
yuvraj
yuvraj

உலகக்கோப்பை போட்டி மிகவும் பரபரப்பாக இறுதிகட்டத்தை எட்டியுள்ளது, சமீபத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது, அதேபோல் இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியில் நம்பிக்கை நட்சத்திரங்களாக ஜொலிப்பது ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா தான் இந்த மூவரை தான் இந்திய அணி ரசிகர்கள் அதிகமாக நம்புகிறார்கள்..

விராட் கோலி இந்திய அணியில் எளிதாக அரை சதங்களை விலாச கூடியவர் ஆனால் இவரால் கூட இதுவரை ஒரு அரை சதத்தை கூட சமமாக மாற்ற முடியவில்லை, ஆனால் ரோகித் சர்மா அபாரமாக ஆடி வருகிறார் இந்த உலகக் கோப்பை போட்டியில் 7 இன்னிங்ஸ்களில் ஆடி அதில் நான்கு சதங்களை கடந்துள்ளார் கடைசியாக இவர் அடித்தது வங்கதேசத்துக்கு எதிரான சதத்தை விளாசியது இவருக்கு 4 வது அரைசதம்.

அதேபோல் இந்த உலகக் கோப்பை போட்டியில் 7 இன்னிங்ஸ்களில் விளையாடி 544 ரன்கள் எடுத்துள்ளார் ரோகித் சர்மா அதிக ரன்கள் குவித்த வீரர்களில் ரோகித் சர்மா முதல் இடத்தில் இருக்கிறார் அதேபோல் இந்திய அணி இறுதிப் போட்டி வரை சென்றால் ரோகித் சர்மா இனிவரும் போட்டிகளில் தனது ஆட்டத்தை சிறப்பாக ஆடினால்  தொடர் நாயகன் விருதை வெல்ல வாய்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில் தொடர் நாயகன் விருதை வெல்லும் வாய்ப்பை நெருங்கிவிட்டதாக டுவிட்டரில் யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவித்திருந்தார் ரோகித் சர்மாவிற்கு.
இதைப் பார்த்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் கூறியதாவது இங்கிலாந்து அணி கோப்பையை வென்றால் ரோகித் தொடர் நாயகன் விருதை வெல்ல வாய்ப்பில்லை என பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இங்கிலாந்து பீட்டர்சன் பதிவிற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் யுவராஜ் சிங், யுவராஜ் சிங் கூறியதாவது நீங்கள் முதலில் அரையிறுதிக்கு தேர்வு பெறுங்கள் அதன் பிறகு ஜெயிப்பதை பற்றி பேசலாம், நான் கூறியது தொடர் நாயகன் விருதை பற்றிதான் பேசினேனே தவிர உலக கோப்பை வெற்றியை பற்றி பேசவில்லை என சரியான பதிலடி கொடுத்துள்ளார்.